பஸ் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இளைஞன் பலி

15 Jan, 2025 | 11:15 AM
image

தணமல்வில - உடவளவை பிரதான வீதியில் 25 ஆவது மைல்கல் அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தணமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.

தணமல்வில பகுதியிலிருந்து உடவளவை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில்  தணமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மொனராகலை, செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய  இளைஞன் ஆவார். 

இதனையடுத்து பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தணமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வத்தளையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது...

2025-02-08 12:09:11
news-image

திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில்...

2025-02-08 11:55:17
news-image

நாரங்கல பகுதியில் புதையல் தோண்டிய நால்வர்...

2025-02-08 11:51:45
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2025-02-08 11:28:56
news-image

மாத்தறையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2025-02-08 11:19:51
news-image

யாழ். கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள்...

2025-02-08 11:02:22
news-image

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத்...

2025-02-08 09:59:53
news-image

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவன்...

2025-02-08 09:57:57
news-image

சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கான பணியிடமாற்றத்துக்கு நிறைவுகாண்...

2025-02-07 20:16:30
news-image

ஒரு சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள்...

2025-02-07 20:22:35
news-image

இன்றைய வானிலை

2025-02-08 06:05:17
news-image

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது...

2025-02-08 02:19:36