இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் யுத்தநிறுத்த உடன்படிக்கை கைசாத்தாவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிகளில் 33 பேரை விடுதலை செய்யும் என இஸ்ரேலிய அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர்.
டோஹாவில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினர் உருவாக்கிவரும் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் முதல்கட்டமாக ஹமாஸ் 33 பணயக்கைதிகளை விடுதலை செய்யும் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கை ஸ்திரதன்மை இழக்கச்செய்த காசாவை முற்றாக அழித்துள்ள 15 மாத யுத்தத்தை நிறுத்துவதற்கான உடன்பாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை கலந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்த உடன்படிக்கை முற்றுகையிடப்பட்டுள்ள காசாவிற்குள் மேலும் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கும்2023 ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் ஹமாஸின் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுதலையாவதற்கும் வழிவகுக்கும்.
இஸ்ரேலில் இருந்து பிடித்துச்செல்லப்பட்ட 251பணயக்கைதிகளில் 94 பேர் இன்னமும் ஹமாசினதும் அதன் சகாக்களினதும் பிடியில் உள்ளனர் என தெரிவித்துள்ள இஸ்ரேல் 34 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
புதிய யுத்தநிறுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக 33 பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என இஸ்ரேல் எதிர்பார்க்கின்றது.
இதேவேளை உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களையும் ஹமாஸ் வழங்கலாம் என இஸ்ரேல் எதிர்பார்க்கின்றது.
முதற்கட்டமாக 42 நாள் யுத்த நிறுத்தம் நடைமுறையிலிருக்கும் காலப்பகுதியில் பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படலாம்.
இருதரப்பும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும் தருவாயில் உள்ளன உடன்படிக்கை கைச்சாத்தானதும் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு இஸ்ரேல் தயாராகவுள்ளது என இஸ்ரேலின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்..
இஸ்ரேலுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கை மற்றும் பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான உடன்படிக்கையின் நகல்வடிவை ஹமாஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.
பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர்.
ஹமாஸ் யுத்த நிறுத்த உடன்படிக்கை மற்றும் பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான உடன்படிக்கையின் நகல்வடிவை ஏற்றுக்கொணடுள்ளது,இறுதிவிடயங்களை உறுதி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரியொருவர் ஏபிசெய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை இஸ்ரேலிய அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கவேண்டியிருக்கும் .
பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள கத்தார் அதிகாரிகள் கடந்த வருடங்களில் தடையாக காணப்பட்ட விடயங்களிற்கு தீர்வை காணமுடிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்த ஆவணத்தின் இறுதிநகலை ஆராய்ந்து வருவதாக ஹமாஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM