நவீன மற்றும் சமகாலக் கலைக்கான இலங்கை அருங்காட்சியகமானது (MMCA இலங்கை) ‘முழு நில அமைப்பு’ எனும் கண்காட்சியின் இரண்டாவது சுழற்சியை டிசம்பர் 15ஆம் திகதி அன்று திறந்துவைத்தது. சந்தேவ் ஹன்டி மற்றும் தினால் சஜீவ ஆகியோரால் எடுத்தாளப்பட்ட இந்தக் கண்காட்சியானது இலங்கையில் நிலப்பரப்புகள் மாற்றமடைந்துள்ள பரந்த, சடுதியான, கிளர்த்தும் பாங்கான வழிகளை ஆராய்கிறது.
‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் இரண்டாவது சுழற்சி இலங்கையைச் சேர்ந்த ஒன்பது சமகால கலைஞர்களின் படைப்புக்களை காட்சிப்படுத்துகிறது. அவர்களில் அப்துல் ஹாலிக் அஸீஸ் (பி.1985), சந்திரகுப்த தேனுவர (பி.1960), தனுஷ்க மாரசிங்க (பி.1985), டொமினிக் சன்சோனி (இ.1956), ஜாஸ்மின் நிலானி ஜோசப் (பி.1990), கோரலேகெதர புஷ்பகுமார (பி.1968), பால பொ(த்)துபிட்டிய (பி.1972), பிரதீப் தலவத்த (பி.1979) மற்றும் தா. சனாதனன் (பி.1969) ஆகியோர் அடங்குவர்.
மூன்று சுழற்சிகளாக எட்டு மாத காலப்பகுதியில் திறக்கப்படும் ‘முழு நில அமைப்பு’ கண்காட்சியானது, மரபார்ந்த நிலக்காட்சி சித்திரிப்புகளுக்கு அப்பாற்சென்று படைப்புகளை உருவாக்கியுள்ள 29 சமகால கலைஞர்களின் படைப்புகளை ஒன்றிணைக்கிறது. மாறாக, இந்தக் கலைஞர்களின் படைப்புகள், நிலம் பற்றிய புரிதல்கள் எவ்வாறெல்லாம் கட்டமைக்கப்பட்டுள்ளன மற்றும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளன என்பதை பதிவு செய்கின்றன.
‘முழு நில அமைப்பு’ என்பது நிலத்துடனான நமது உறவுகளை முற்றிலும் மறுபரிசீலனை செய்யும் வகையில் மாறி வரும் காட்சிகளின் தொடராக விரிகிறது. ‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் இரண்டாவது சுழற்சி 2025 மார்ச் 2 வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்திருக்கும். கண்காட்சிக்கான நுழைவு இலவசம். அருங்காட்சியகம் கொழும்பு 3இல் உள்ள கிரெஸ்கட் புலவார்டின் தரைத்தளத்தில் அமைந்துள்ளது.
“‘முழு நில அமைப்பு’ கண்காட்சியின் இரண்டாவது சுழற்சி ஒளிப்படங்கள் மற்றும் ஓவியங்கள் முதல் சிற்பங்கள் மற்றும் நிறுவலாக்கங்கள் வரையிலான படைப்புக்களின் புதிய தேர்வுகளை அறிமுகப்படுத்தும். தனுஷ்க மாரசிங்கவின் ‘Walk(er)’ வயல் நிறுவலாக்கம் மட்டுமே முதலாவது சுழற்சியிலிருந்து எடுத்துவரப்பட்ட ஒரே படைப்பாகும்” என சஜீவ கூறினார்.
“இந்த சுழற்சியில் பார்வையாளர்களுக்கு ஈடுபாட்டு அனுபவத்தை வழங்குவதில் உறுதியளிக்கின்ற மூன்று ஊடாடும் கலைப்படைப்புகள் உள்ளன” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த ஊடாடும் படைப்புகளில் பிரதீப் தலவத்தவின் முதல் முறையாக காட்சிப்படுத்தப்படுகின்ற ‘You came to see me, and now I am here’ (2023), தா. சனாதனனின் ‘Drawers of War Transactions’ (2019) ஆகியவை அடங்குகின்றன.
அருங்காட்சியகம் தினமும் மு.ப 10 மணி முதல் பி.ப 6 மணி வரை (பௌர்ணமி மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர), கொழும்பு 3இல் அமைந்துள்ள க்ரெஸ்கட் புலவாட்டின் தரைத்தளத்தில் திறந்திருக்கும்.
மேலும், அருங்காட்சியகத்துக்கும் அதன் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம் ஆகும். அருங்காட்சியகம், அதன் கண்காட்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை அவர்களின் இணையத்தளமான www.mmca-srilanka.org இல் அல்லது முகநூலில் facebook.com/mmcasrilanka மற்றும் இன்ஸ்டகிராமில் instagram.com/mmcasrilanka/ பார்த்து அறியலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM