மல்வத்து ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞரை தேடும் பணியில் பொலிஸார்

15 Jan, 2025 | 11:17 AM
image

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (13) மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் குறித்த இளைஞரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.    

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

காணாமல் போன  இளைஞன்  குறித்து மடு பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில்  மடு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். 

இதன் போது குறித்த இளைஞன் நீராடச் சென்ற பகுதிக்குச் சென்ற பொலிஸார் மற்றும் அப்பிரதேச மக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (14) மாலை தேடுதல்களை மேற்கொண்டனர்.   

பொலிஸார் மற்றும் அப்பிரதேச மக்கள் இணைந்து தேடிய போதும்  குறித்த இளைஞன் இதுவரை  மீட்கப்படவில்லை. 

சம்பவத்தில் 23 வயதுடைய புஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி நபர் கடந்த திங்கட்கிழமை (13)  ஐந்து பேருடன் மடு தேவாலயத்திற்கு சென்றுவிட்டு மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி காணாமல் போனமை விசாரணையில் தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில்...

2025-02-08 11:55:17
news-image

நாரங்கல பகுதியில் புதையல் தோண்டிய நால்வர்...

2025-02-08 11:51:45
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2025-02-08 11:28:56
news-image

மாத்தறையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2025-02-08 11:19:51
news-image

யாழ். கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள்...

2025-02-08 11:02:22
news-image

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத்...

2025-02-08 09:59:53
news-image

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவன்...

2025-02-08 09:57:57
news-image

சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கான பணியிடமாற்றத்துக்கு நிறைவுகாண்...

2025-02-07 20:16:30
news-image

ஒரு சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள்...

2025-02-07 20:22:35
news-image

இன்றைய வானிலை

2025-02-08 06:05:17
news-image

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது...

2025-02-08 02:19:36
news-image

வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மேலதிக பாகங்களுக்கு...

2025-02-08 01:58:23