தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதுவை மற்றும் வெலிப்பன்னை ஆகிய பிரதேசங்களின் நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சீரற்ற காலநிலையினால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள வௌ்ளநிலை காரணமாக அப்பகுதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த பகுதியினூடாக உட்செல்லவே அல்லது வௌிசெல்லவோ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,இப்பகுதியினூடாக பயணிக்கும் சாரதிகளுக்கு மாற்றுவீதியினை பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.