கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் விபத்து ; பல்கலை மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயம்

15 Jan, 2025 | 11:10 AM
image

வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் உள்ள பாதசாரி கடவையில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரவு 10.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பல்கலைக்கழக்தில் கல்விகற்றுவரும் 3 மாணவர்கள் செங்கலடியில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு முச்சக்கரவண்டியில் பயணித்து பல்கலைக்கழகத்தின் முன்னால் உள்ள பாதசாரி கடவை பகுதியில் எதிர்பக்கமாக முச்சக்கரவண்டியை திருப்பும் போது கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த  தனியார் பஸ் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவரும்  மூன்று பல்கலை மாணவர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து படுகாயமடைந்தவர்கள்  உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன்  பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைத்தொலைபேசிகள், டெப் கணினிகளுடன் சுங்க அதிகாரிகளிடம்...

2025-02-14 13:46:47
news-image

ரயில் மோதி வேன் விபத்து -...

2025-02-14 13:01:44
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-14 12:41:02
news-image

மதுபானசாலையை இடமாற்றக் கோரி பூநகரி பிரதேச...

2025-02-14 12:55:44
news-image

வரக்காபொலயில் லொறி - டிப்பர் வாகனம்...

2025-02-14 12:51:04
news-image

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ!; காலாவதியான தீயணைப்புக்...

2025-02-14 12:50:11
news-image

மீகஸ்வெவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர்...

2025-02-14 12:48:22
news-image

லசந்த படுகொலை விவகாரத்தை சட்டமா அதிபர்...

2025-02-14 12:00:12
news-image

போலி தகவல்களுடன் கூடிய அறிக்கை ;...

2025-02-14 12:13:46
news-image

கஞ்சா செடிகள், துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது...

2025-02-14 12:33:08
news-image

கிளிநொச்சியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2025-02-14 12:24:21
news-image

வவுனியா, கிளிநொச்சி மாவட்டத்துக்கான உலக உணவுத்...

2025-02-14 12:23:16