அவுஸ்திரேலியாவில் கரை ஒதுங்கும் உருண்டை வடிவிலான மர்மப்பொருள் 

Published By: Digital Desk 3

15 Jan, 2025 | 09:25 AM
image

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னியில் உள்ள கடற்கரைகளில் உருண்டை வடிவிலான மர்மப்பொருள் கரையொதுங்கி வருகின்றன.

இதன் காரணமாக, குயின்ஸ்க்ளிப், ப்ரெஷ்வாட்டர், நார்த் கர்ல் கர்ல், நார்த் ஸ்டெய்ன் மற்றும் நார்த் நரபீன் கடற்கரைகள் மூடப்பட்டு புதன்கிழமை காலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

தற்போது, மர்மப்பொருள் கரையொதுங்கிய டீ வை மற்றும் சவுத் கர்ல் கர்ல் ஆகிய இரண்டு  கடற்கரைகள்  மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் வெள்ளை மற்றும் சாம்பல் நிற உருண்டை வடிவிலான பொருள்கள் கரை ஒதுங்கியுள்ளன. இந்நிலையில், மர்மப்பொருள் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள்  தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கூகி மற்றும் ப்ரோண்டே உள்ளிட்ட பல கிழக்கு புறநகர் கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான இந்த மர்மப்பொருள் கரை ஒதுங்கிய நிலையில் தற்காலிகமாக மூடப்பட்டன.

இந்த மர்மப்பொருள் ஆரம்பத்தில் கச்சா எண்ணெயை உள்ளடக்கிய "தார் பந்துகள்" என கூறப்பட்டது.


Photograph: Northern Beaches Council

நியூ சவுத் வேல்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழு  தெரிவிக்கையில், 

டிசம்பர் மாதம் ஆரம்பத்தில் சிட்னியின் தெற்கில் உள்ள கர்னலில் உள்ள சில்வர் கடற்கரையில் பச்சை, சாம்பல் மற்றும் கருப்பு நிற பந்து வடிவிலான மர்மப்பொருள் கரையொதுங்குவதற்கு முன்பு நவம்பர் மாதம் கியாமா கடற்கரைகள்  அவைகள் காணப்பட்டுள்ளன.

அக்டோபர் மாதம் சிட்னியின் கிழக்கு புறநகர் கடற்கரைகளில் காணப்பட்ட மர்மப்பொருள்களில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் பெட்ரோலியம் ஹைட்ரோகார்பன்கள் இருந்தது.

ஆனால் அவற்றை ஒப்பிடுவதற்கு எந்த மூல மாதிரியும் கிடைக்கவில்லை" என்பதால், சோதனையால் "ஒரு ஆதாரத்தை" அல்லது அவை உருவாவதற்கான காரணத்தை அடையாளம் காண முடியவில்லை.

கியாமாவில் மர்மப்பொருள்களில் பகுப்பாய்வு, கிழக்கு கடற்கரைகளில் கழுவப்பட்டதைப் போன்ற கலவையைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தது.

இந்த வாரத்தில் வடக்கு கடற்கரைகளில் காணப்படும் மர்மப்பொருள்கள் கிழக்கு கடற்கரைகளில் காணப்பட்டதைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதால் அவற்றைத் தொட வேண்டாம் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்ப் முயற்சிக்கு முட்டுக்கட்டை யுஎஸ்எயிட்ஊழியர்களை நீக்கும்...

2025-02-09 14:04:10
news-image

டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ஆசைப்படுவது...

2025-02-09 10:38:24
news-image

புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு :...

2025-02-08 16:39:16
news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25