(நெவில் அன்தனி)
நினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் 'கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை' என்ற கருப்பொருளில் இளையோர் கால்பந்தாட்ட லீக் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கையில் இத்தகைய போட்டி ஒன்று நடத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும். இப் போட்டியில் 5 கால்பந்தாட்டப் பயிற்சியகங்களின் 10 வயதுக்குட்பட்ட 6 அணிகள் பங்குபற்றுகின்றன.
ஜாவா லேன் கால்பந்தாட்டப் பயிற்சியகம், குறே கால்பந்தாட்டப் பயிற்சியகம், ஹென்றி பேத்ரிஸ் கால்பந்தாட்டப் பயிற்சியகம், கலம்போ கிக்கர்ஸ் கால்பந்தாட்டப் பயிற்சியகம், போட்டியை முன்னின்று நடத்தும் றினோன் கால்பந்தாட்டப் பயிற்சிகம் (2 அணிகள்) ஆகியன இப் போட்டியில் பங்குபற்றுகின்றன.
சீ. ஆர். அண்ட் எவ். சி. மைதானத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற அங்குரார்ப்பண கனிஷ்ட கால்பந்தாட்ட லீக்கின் ஆரம்ப நாள் போட்டிகளில் றினோன் புளூஸ், றினோன் வைட்ஸ், கலம்போ கிக்கர்ஸ் ஆகிய அணிகள் வெற்றிகளை சூடிக்கொண்டன.
முதலாவது போட்டியில் ஜாவா லேன் எவ். ஏ. அணியை றினோன் புளூஸ் அணி 5 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் ஹென்றி பேத்ரிஸ் எவ். ஏ. அணியை 3 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கலம்போ கிக்கர்ஸ் அணியும் குறே எவ். ஏ. அணியை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் றினோன் வைட்ஸ் அணியும் வெற்றிகொண்டன.
சிறுவர்கள் மத்தியில் கால்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் குறிக்கோளுடன் ஒவ்வொரு வார இறுதியிலும் இப் போட்டிகள் லீக் முறையில் சொந்த மைதானத்திலும் அந்நிய மைதானத்திலும் என்ற ரீதியில் நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதற்கு அமைய ஒவ்வொரு வார இறுதியிலும் ஒவ்வொரு கால்பந்தாட்ட பயிற்சியகம் இப் போட்டியை தத்தமது மைதானங்களில் நடத்தும். இது ஆறு வாரங்களுக்கு தொடர்வதுடன் பிரதான சுற்றுகள் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இலங்கையில் கால்பந்தாட்டத்தின் மேம்பாட்டை முன்னிட்டு றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகம் பல்வேறு நிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் சிறுவர்களுக்காக மிக நேர்த்தியாக நடத்திவருகின்றமை குறிப் பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM