ஒரு கோடியே 74 இலட்சத்து 50 ஆயிரத்து 875 ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் இரண்டு சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
45 வயதுடைய தந்தையும் 21 வயதுடைய மகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் நேற்றைய தினம் இரவு 07.3 மணியளவில் சீனாவின் சோங்கிங் நகரத்தை நோக்கிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்கள் இருவரும் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
சோதனையில் சந்தேக நபர்கள் அணிந்திருந்த ஆடைகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மாணிக்கக் கற்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவருக்கும் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM