(நமது நிருபர்)
இழுவைமடிப்படகு , சுருக்குவலை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக அரசாங்கமும் தடைசெய்வதற்கு உடனடியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அயகத்தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அவர் தமிழகத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழக முதல்வர், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் மூலம் தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்படையால் கைது செய்யப்படுகின்றார்கள் என்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார். ஆனால் அவர்கள் ஏன் கைது செய்யப்படுகின்றார்கள் என்பதை கூறுவதற்கு அவர் மறுதலித்துவிட்டார்.
எந்தவொரு பிரஜையும் வெளிநாட்டுக்குச் செல்கின்றபோது காரணம் இல்லாது கைது செய்யப்படுவதில்லை. உண்மையில் இந்திய மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதாலும், சுருக்குவலை, இழுவைமடிப்படகு ஆகிய சட்டவிரோத முறைமைகளை பின்பற்றுவதாலும் தான் கைது செய்யப்படுகின்றார்கள்.
இவ்வாறு அத்துமீறி சட்டவிரோத மீன்பிடி முறைமைகள் மூலமாக நாளைய தலைமுறைக்குச் சொந்தமான வளங்கள் நிறைந்த கடற்பரப்பினையே நாசமாக்கிக் கொண்டுவருகின்றார்கள். இந்தச் செயற்பாட்டுக்கு பெருமளவான தமிழக மீனவர்களே எதிர்ப்பு வெளியிடுகின்றார்கள். ஆனால் குறிப்பிட்ட சிலர் தான் அவ்விதமாகச் செயற்படுகின்றார்கள்.
அவ்வாறு குறிப்பிட்ட சிலர் வளங்கள் நிறைந்த கடற்பரப்பினை நாசமாக்குவதால் பாதிக்கப்படுவது யாரென்று பார்த்தீர்கள் என்றால் வடக்கில் உள்ள தமிழர்கள் தான். அவர்கள் மூன்று தசாப்தமாக போருக்கு முகங்கொடுத்து உயிர்கள், உடைமைகள் என்று அனைத்தையும் இழந்து நின்றவர்கள் தற்போது தான் தங்களுடைய வாழ்க்கையை பொருளாதார ரீதியாக மீளக் கட்டியெழுப்புவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
வடக்கு தமிழ் மீனவர்கள் என்னிடத்தில் நேரடியாகவே பல சந்தர்ப்பங்களில், இழுவை மடிப்படகுகள் உட்பட சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்களை தடுத்து நிறுத்துங்கள் இல்லையென்றால் நாங்கள் கடலில் வீழ்ந்து தான் மரணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
ஆகவே இந்தவிடயம் சம்பந்தமாக நாம் இந்திய உயர்ஸ்தானிகரிடத்தில் எடுத்துரைத்துள்ளோம். தமிழக முதல்வரிடத்திலும் ஒருவிடயத்தினை நாம் கோரிக்கையாக முன்வைக்கின்றோம். அதாவது சட்டவிரேதமான மீன்பிடி முறைமைகளை தடைசெய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மேலும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபவர்கள் தான் கைது செய்யப்படுகின்றாhகள் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.
தமிழக மீனவர்கள் இந்தியாவின் ஏனைய மாநிலங்களான ஆந்திராவுக்குள்ளோ, குஜராத்துக்குள்ளோ, கேரளாவுக்குள்ளோ செல்லமுடியுமா? இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்பரப்பிற்குள்ளோ, சீனக் கடற்பரப்பிற்குள்ளோ செல்ல முடியுமா? இல்லை.
ஆனால் இலங்கைக் கடற்பரப்பினையே தான்தோன்றித்தனமாக பயன்படுத்தும் செயற்பாடு எதேச்சதிகாரமாக முன்னெடுக்கப்படுகின்றது. அந்தச் செயற்பாட்டையே நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
சட்டவிரோத மீன்பிடி முறைமைகளான சுருக்குவலை மற்றும் இழுவைமடிப்படகு ஆகியவற்றை தடைசெய்யும் தீர்மானத்தினை இந்திய மத்திய அரசாங்கம் எடுத்துள்ள நிலையில் தமிழக அரசாங்கமும் அத்தீர்மானத்தினை எடுப்பதோடு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். அதில் காணப்படுகின்ற தாமதங்களால் தான் கைதுகள் தொடருகின்றன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM