மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாதனை ஜெமிமாவின் சதத்துடன் அயர்லாந்தை இலகுவாக வென்றது

14 Jan, 2025 | 05:02 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் அயர்லாந்துக்கும் இடையில் ராஜ்கொட், சௌராஷ்ட்ரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் திங்கட்கிழமை நடைபெற்ற மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜெமிமா ரொட்றிக்ஸ் குவித்த கன்னிச் சதத்தின் உதவியுடன் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது அதிகூடிய மொத்த எண்ணிக்கையைப் பதிவுசெய்ததுடன் அயர்லாந்துடனான தொடரையும் கைப்பற்றியது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 370 ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தது.

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியா குவித்த அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். இதே அணிக்கு எதிராக 2017இல் குவித்த 358 ஓட்டங்களே  சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில்  இந்தியாவின் முந்தைய அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது.

இப் போட்டியில் அயர்லாந்தை 116 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இந்தியா 3  போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதம் இருக்க இப்போதைக்கு 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

அப் பொட்டியில் இந்தியா சார்பாக மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஜெமிமா ரொட்றிக்ஸ் சதம் குவித்து அசத்தினார்.

ஸ்ம்ரித்தி மந்தனா, ப்ரத்திகா ராவல் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் முதலாவது விக்கெட்டில் 114 பந்துகளில் 156 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்து அதே எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தனர்.

ஸ்ம்ரித்தி மந்தனா 73 ஓட்டங்களையும் ப்ரதிகா ராவல் 67 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர் ந்து  ஹார்லீன் டியோல், ஜெமிமா ரொட்றிக்ஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 183 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர்.

டியோல் 89 ஓட்டங்களைப் பெற்றார்.

கடைசி ஓவரில் ஆட்டம் இழந்த ஜெமிமா ரொட்றிக்ஸ் 102 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஓர்லா ப்ரெண்டகாஸ்ட், ஆலீன் கெலி ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

கிறிஸ்டினா கூல்டர் ரெய்லியும் லோரா டிலேனியும் 4ஆவது விக்கெட்டில் 83 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு தற்காலிக நெருக்கடியைக் கொடுத்தனர்.

ஆனால், அவர்கள் இருவரும் ஆட் டம் இழந்ததும் இந்தியாவின் வெற்றி உறுதியாயிற்று.

கிறிஸ்டினா கூல்டர் ரெய்லி 80 ஓட்டங்களையும் ஆரம்ப வீராங்கனை சரா ஃபோர்பஸ் 38 ஓட்டங்களையும் லோரா டிலேனி 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரியா மிஷ்ரா 53 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஜெமிமா ரொட்றிக்ஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11