நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை - அமைச்சர் ஆனந்த விஜேபால

Published By: Digital Desk 2

14 Jan, 2025 | 07:55 PM
image

(நமது நிருபர்)

நளொன்றுக்கு 2,500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மக்கள்  தங்களின் புதிய கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கோ அல்லது புதிப்பிப்பதற்கோ சுமார் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளது.

அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டியிருந்தால், அவ்விதமான தேவையுடைய நபர் எவ்விதமாக கடவுச்சீட்டைப்பெற்றுக்கொள்ள முடியும் என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நாளொன்றுக்கு 1,100 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடவுச்சீட்டுக்களை புதிப்பிப்பதற்கோ அல்லது புதிதாக பெறுவதற்கோ இணையவழியின் மூலமாக நேர ஒதுக்கீட்டைச் செய்வதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் குழுவொன்றால் மதிப்பாய்வு செய்யப்படும். அந்த வகையில் கடவுச்சீட்டுக்களை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இதேநேரம், அவசரமாக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய  சந்தர்ப்பங்களில் கடவுச்சீட்டுக்களை பெறுவதற்கு பிரத்தியேக முறைமையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஊடாக அவசர தேவையுடைவர்களின் நியாயமான காரணங்கள் ஆராயப்பட்டு கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின்...

2025-02-09 09:29:03
news-image

தமிழரசுக்கு எதிரான திருமலை வழக்கு :...

2025-02-08 23:29:29
news-image

ஜனாதிபதி அநுர நாளை எமிரேட்ஸ் செல்கிறார்

2025-02-09 08:57:55
news-image

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துங்கள்...

2025-02-08 23:28:18
news-image

அரசியல் தீர்வை கைவிட்டால் நாடு பாதாளத்தில்...

2025-02-08 23:27:28
news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28
news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07