இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு : புதிய அணுகுமுறைகளுடன் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவிப்பு

Published By: Digital Desk 2

14 Jan, 2025 | 07:58 PM
image

இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்காக  மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.   

இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடித்தலை முடிவுக்குக் கொண்டுவர இந்திய அதிகாரிகளுடன் ஒரு உடன்பாட்டை எட்டுமாறு பல மீன்பிடி தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிந்திய மீனவர்கள் இழுவைபடகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதோடு சட்டவிரோத உபகரணங்களையும் பயன்படுத்துகின்றார்கள். இதனை இலங்கை மீனவர்கள் எதிர்க்கின்றார்கள். அத்துடன் இந்த நடைமுறைகள் இந்தியப் பெருங்கடலின் கடல் வளங்களுக்கும் தீங்கு விளைவிப்பதால் இரு தரப்பினருக்குமே பாதிப்புக்கள் ஏற்படுகிறன.

இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியத் தரப்பும் தயாராக உள்ளது. தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் விடயங்களை முன்னெடுப்பதற்கு நாமும் தயாராகவே உள்ளோம். ஆனால் அடுத்து வரும் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட அணுகுமுறையுடன், இந்திய அதிகாரிகளுடன் விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது கூட இந்த விவகாரம் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அது மட்டும் போதாது. எனவே, இந்திய அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்தியப் பெருங்கடலுக்கு ஏற்படும் சேதங்கள் காரணமாக பெரும்பாலான தென்னிந்திய மீனவர்களும் சட்டவிரோதமான மீன்படி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவே உள்ளனர், இருப்பினும் ஒரு சில மீனவர்கள் மட்டுமே இதுபோன்ற சட்டவிரோத நடைமுறைகளில் ஈடுபடுகிறார்கள்.

ஒரு நாடாக தனியாக நடவடிக்கைகளை எடுப்பதை விட, ஒரு இராஜதந்திர அணுகுமுறை மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். கடந்த ஆண்டு ஒக்டோபரில், ஆறாவது தடவையாக இந்திய-இலங்கை கூட்டுப் பணிக்குழு கூட்டம் கொழும்பில் நடைபெற்றது, இதில் இந்திய மீன்வள அமைச்சின் மூத்த அதிகாரிகள் தலைமையிலான இந்தியக் குழு கலந்து கொண்டது.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கூட்டு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர் இருப்பினும், அது இறுதித் தீர்மானம் இல்லாமல் முடிந்தது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்திய அடிமட்ட இழுவைப் படகுகளால் உள்ளுர் மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதம் 700 மில்லியன் ரூபாவாகக் காணப்படுகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12