(நெவில் அன்தனி)
வடக்கு மாகாணத்தில் மேசைப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு விசேட பயிற்சித் திட்டத்தை இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கம் அண்மையில் நடத்தியது.
சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கம் நடத்திய இந்தத் திட்டத்தில் பயிற்சியாளர்களுக்கு விசேட நுட்பவியல் பயிற்சி அளிக்கப்பட்டது.
பிராந்தியத்தில் உள்ளூர் பயிற்றுநர்களின் ஆற்றல்களையும் தரத்தையும் உயர்த்தும் வகையில் இந்த பயிற்சித் திட்டம் சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் நிபுணத்துவம் பெற்ற பயிற்றுநர் மொஹம்மத் அத்தூம் தலைமையில் வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் 30 மணித்தியாலங்களுக்கு நடத்தப்பட்டது.
இதனைவிட சிரேஷ்ட பயிற்றுநர்களின் கீழ் பயிற்றுநர்களை ஆளுகைப்படுத்துதல் மற்றும் செயற்பாட்டு அனுபவம், ஆழமான கற்றல் ஆகிய விடயங்களும் புகட்டப்பட்டது.
இலங்கை மெசைப்பந்தாட்ட விளையாட்டுத்துறையின் எதிர்காலத்திற்கு தேவையான வலுவான அத்திவாரத்தை இடும் பொருட்டு இந்தப் பயிற்சித் திட்டத்தை இலங்கை மேசைப்பந்தாட்ட சம்மேளனம் நடைமுறைப்படுத்தியது.
இந்தப் பயிற்சியின்போது சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் 3ஆம் நிலை பயிற்றுநர் சான்றிதழ் கொண்ட அபிவிருத்தித் திட்ட செயலாளரும் இலங்கை மேசைப்பந்தாட்ட சங்கத்தின் முன்னாள் தலைவருமான சந்தன பெரேரா விசேட ஆலோசனைகளை வழங்கினார்.
இப் பயிற்சிகள் யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம், கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை, பருத்தித்துறை, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM