ஏறாவூரில் கிணற்றுக்குள் வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!

14 Jan, 2025 | 02:18 PM
image

மட்டக்களப்பு  ஏறாவூர் பிரதேசத்தில் திங்கட்கிழமை (13) பிற்பகல் கிணற்றில் தவறி வீழ்ந்து இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் இரண்டாம் பிரிவு மக்காமடி வீதியைச் சோந்த பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் உள்ள கிணற்றிற்கு அருகில் கதிரை ஒன்று வைக்கப்பட்டிருந்துள்ள நிலையில் சம்பவ தினத்தன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளது.

இதன்போது இந்த குழந்தை கிணற்றுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த கதிரையில் ஏறி கிணற்றை எட்டிப்பார்த்த போது கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளது. 

இந்நிலையில் மாலை நேரமாகியும் குழந்தையைக் காணவில்லை என பெற்றோர் தேடிய போது கிணற்றுக்குள் குழந்தை வீழ்ந்து கிடப்பதைக் கண்டு உடனடியாக குழந்தையை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறுதிச் சடங்கு நிகழ்வில் தகராறு ;...

2025-02-12 10:05:14
news-image

139 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் 

2025-02-12 09:53:34
news-image

கஜேந்திரகுமாருக்கு நீதிமன்று அழைப்பாணை

2025-02-12 09:57:38
news-image

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக...

2025-02-12 09:17:43
news-image

டான் ப்ரியசாத்துக்கு விளக்கமறியல்

2025-02-12 09:52:23
news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24