நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை

14 Jan, 2025 | 02:18 PM
image

நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் தைப்பொங்கல் பண்டிகையினை இன்று செவ்வாய்க்கிழமை (14)  தமிழர்கள் சிறப்பாக கொண்டாடினர்.  

உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு  உலகளாவிய ரீதியில் தமிழர்கள்  ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.

அந்த வகையில் நாட்டிலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பொங்கல் பண்டிகை சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு

சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.

மன்னார்

மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மற்றும் கத்தோலிக்க தமிழ் மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள  இந்து ஆலயங்களில் விசேட தைப் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றது.

மேலும் வர்த்தக நிலையங்கள், நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட தோடு விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் பொங்கி  மக்கள் மகிழ்சியை பகிர்ந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மக்கள் அமைதியான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

கண்டி

கண்டி ஸ்ரீ செல்வ விநாயகர்  ஆலயத்தில் தைப்பொங்கல் விசேட சமய வழிபாடு கோயில் அறங்காவலர் கிருஸ்ணமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

காலையில் பொங்கல் நிகழ்வுகளுடன் விசேட சமய வழிபாடுகள் இடம்பெற்றன. பக்த அடியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

யாழ்ப்பாணம்

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம் 

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை (14) சிறப்பு பொங்கல் வழிபாடு இடம்பெற்றது.

வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் 

யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட பூசைகள் அதன் பிரதம குரு ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ சுதர்சன கணபதீஸ்வர குருக்கள்  தலமையில் இன்று இடம் பெற்றது.

புத்தளம்

தைப்பொங்கள் விஷேடப் பூஜை புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டது

புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பொங்கள் விஷேட பூஜைகள் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ அம்பலவானன் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா

உழவர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்றன.

அதற்கிணங்க, வவுனியாவின் பிரதான ஆலயங்களில் ஒன்றாகிய கந்தசாமி ஆலயத்தில் புதுப் பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் இடம்பெற்றதுடன், ஆலய பிரதம குரு தலைமையில் விசேட பூசையும் இடம்பெற்றது.

திருகோணமலை

உலகவாழ் இந்துக்கள் தைப்பொங்கலை இன்று செவ்வாய்க்கிழமை (14) வெகு விமரிசையாக கொண்டாடிய நிலையில், திருகோணமலை  மாவட்டத்திலும் தைப்பொங்கல் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

139 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் 

2025-02-12 09:53:34
news-image

கஜேந்திரகுமாருக்கு நீதிமன்று அழைப்பாணை

2025-02-12 09:57:38
news-image

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக...

2025-02-12 09:17:43
news-image

டான் ப்ரியசாத்துக்கு விளக்கமறியல்

2025-02-12 09:52:23
news-image

இன்றைய வானிலை

2025-02-12 06:42:10
news-image

இலங்கையில் ஆண் - பால் பாலினம்...

2025-02-11 22:32:27
news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43