உலகெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில், அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உழவர் பெருங்குடி மக்கள் நன்றி தெரிவித்து வணங்கி மகிழும் இனிய திருவிழாவாகவும், மனிதனுக்கும் இயற்கையின் கொடைகளுக்கும் இடையிலான பரஸ்பர உடன்படிக்கையை புதுப்பிக்கும் கலாசாரப் பண்டிகையான தைப்பொங்கல் தமிழ்ச் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டை உலகுக்கு உணர்த்திடும் திருவிழாவாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
உலக வாழ் தமிழ் மக்கள் தொன்று தொட்டு மேற்கொண்டு வரும் சூரிய பகவான் மீதான வழிபாட்டின் வெளிப்பாடாகவும் தைப்பொங்கல் இருந்து வருகின்றது.
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம், தொழுதுண்டு பின் செல்பவர்" என்ற குறளில் வள்ளுவப் பெருந்தகை, உழவுத் தொழில் செய்து வாழ்கின்றவரே சுய சார்போடு வாழ்கின்ற பெருமையுடையவர்கள் என்னும் பொருள்பட, உழவுத் தொழிலின் மேன்மையினை உலகத்தோர்க்கு உணர்த்தியுள்ளார்.
அத்தகைய சிறப்புமிக்க உழவர் பெருமக்கள் தமது வேளாண் நிலங்களில் சாகுபடி செய்யும் விளைபொருட்களின் உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் இறைவனை வணங்கியும், தம்மோடு சேர்ந்து உழைத்து தம் வருமானத்திற்கு அச்சாரமாகத் திகழ்கின்ற கால்நடைகளுக்கு, தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாள் பொங்கல் திருநாளாகும்.
அனைவருக்கும் மகிழ்ச்சி தருகின்ற அறுவடைத் திருநாளாம் இப்பொங்கல் திருநாளில் தமிழர்களின் வாழ்வில் நலமும், வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என்று செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM