தமிழகத்திலுள்ள அகதிகளை வட,கிழக்கில் மீள்குடியேற்றுவதற்கான திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் - சாணக்கியன் 

Published By: Vishnu

14 Jan, 2025 | 01:38 AM
image

(ஆர்.ராம்)

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களின் தாயகத்துக்கு அழைத்து வந்து மீள்குடியேற்றம் செய்வதற்கான முன்னோடித்திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற அயகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த சாணக்கியன் எம்.பி, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுnhழ்வுத்துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஐ.நா அகதிகள் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டவர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

இதன்போது, 'வடக்கு,கிழக்கில் இருந்து அசாதாரண சூழல்களில் வெளியேறிச் சென்றிருந்த தமிழ் மக்கள் தமிழகத்தில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவர்களது சொந்த நிலங்களில் குடியேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, வடக்கு,கிழக்கில் குடிப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் தங்கியிருக்கின்ற அகதிகள் தாயகம் திரும்புவது அவசியமாகும்' என்று சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், அவர்களை ஒட்டுமொத்தமாக நாட்டுக்கு மீள அழைத்து வரும்போது அவர்களுக்கான அடிப்படைய வசதிகள் உள்ளிட்ட இதர விடயங்களை முன்னெடுப்பதில் சிக்கலான நிலைமைகள் உள்ளமையால் முன்னோடித்திட்டமொன்றை முன்னெடுப்பது பொருத்தமானது என்று கருதுவதாகவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு குறித்த அதிகாரிகள் சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்திய நிலையில், வடக்கு, அல்லது கிழக்கு மாகாணத்தின் குறித்த பகுதியொன்றில் 25 முதல் 30 குடும்பங்களை முதலில் தாயகத்துக்கு வரவழைத்து மீள்குடியேற்றி அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் யோசனைக்கும் சம்மதத்தினை வெளியிட்டனர்.

இவ்வாறான நிலையில் விரைவில் முதற்கட்டமாக தமிழகத்திலிருந்து ஒருதொகுதி குடும்பங்கள் அழைத்துவரப்படுவதற்கு எதிர்பார்ப்பதாக சாணக்கியன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

 

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07
news-image

46 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2026-04-14 12:12:23
news-image

மட்டக்களப்பு மண்முனையில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி...

2026-04-14 12:39:18
news-image

பஸ் கட்டணம் அதிகம் வசூலிக்கப்பட்டால் உடனே...

2026-04-14 12:38:32
news-image

லக்கலை, ரனமுரே பகுதிகளுக்கு புதிய பஸ்...

2026-04-14 11:56:26
news-image

குண்டசாலையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள்...

2026-04-14 11:49:21
news-image

டித்வா புயல் இழப்பீடு தொடர்பில் புதிய...

2026-04-14 12:35:48
news-image

கண்டியில் சுவீப் டிக்கட் விற்பனை எனக்...

2026-04-14 11:50:02
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புத்தாண்டு விசேட வழிபாடுகள்:...

2026-04-14 12:31:17