மொரகாகந்த பகுதியில் பெய்ந்துவரும் கடும் மழை காரணமாக குறித்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

குறித்த பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சுமார் 2 மீற்றர் உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.