(நெவில் அன்தனி)
மலேசியாவில் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு நியமிக்கப்பட்டுள்ள 20 மத்தியஸ்தர்களில் இலங்கையின் தேதுனு வித்யா வைஜயன்தி டி சில்வாவும் ஒருவராவார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்டதற்கு அமைய சரவ்தேச கிரிக்கெட் பேரவையினால் சர்வதேச கிரிக்கெட் மத்தியஸ்தர்கள் தரத்திற்கு நியமிக்கப்பட்ட நான்கு இலங்கையர்களில் தேதுனு டி சில்வாவும் ஒருவராவார்.
வனிசா டி சில்வா, மிச்செல் பெரெய்ரா, நிமாலி பெரேரா, தேதுனு டி சில்வா ஆகிய நான்கு இலங்கையர்களே சர்வதேச கிரிக்கெட்டில் பெண் மத்தியஸ்தர்களாக 2023இல் தரம் உயர்த்தப்பட்டிருந்தனர்.
1978இல் பிறந்த தேதுனு டி சில்வா, 2000இலிருந்து 2010வரை தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் கள மத்தியஸ்தராக செயற்பட்டிருந்தார். குறிப்பாக இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தொலைக்காட்சி மத்தியஸ்தராக செயற்பட்டார். அப் போட்டியில் பொது மத்தியஸ்தராக இலங்கையின் வனேசா டி சில்வா செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருட ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் 16 பேர் கள மத்தியஸ்தர்களாகவும் 4 பேர் பொது மத்தியஸ்தர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கள மத்தியஸ்தர்கள்: ஆஷ்லி கிபன்ஸ் (அவுஸ்திரேலியா), ஷதீரா ஜாக்கிர் ஜெஸ்ஸி (பங்களாதேஷ்), காயத்ரி வேணுகோபாலன் (இந்தியா), நாராயணன் ஜனனி (இந்தியா), எய்டன் சீவர் (அயர்லாந்து), நிட்டின் பாத்தி (நெதர்லாந்து), ரிஸ்வான் அக்ரம் (நெதர்லாந்து), ராகுல் ஆஷர் (ஓமான்), சலீமா இம்தியாஸ் (பாகிஸ்தான), கெரின் கிளாஸ்ட் (தென் ஆபிரிக்கா), தேதுனு டி சில்வா (இலங்கை), விஜய பிரகாஷ் மல்லேலா (ஐக்கிய அமெரிக்கா), கேண்டஸ் லா போர்டே (மேற்கிந்தியத் தீவுகள்), மரியா அபோட் (மேற்கிந்தியத் தீவுகள்), ஃபோஸ்டர் முடிஸ்வா (ஸிம்பாப்வே)
பொது மத்திஸ்தர்கள்: டேவிட் கில்பர்ட் (அவுஸ்திரேலியா), டீன் கொஸ்கர் (இங்கிலாந்து), ட்ரூடி அண்டர்சன் (நியூசிலாந்து), ரியோன் கிங் (மேற்கிந்தியத் தீவுகள்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM