யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவு !

Published By: Digital Desk 2

13 Jan, 2025 | 04:49 PM
image

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05 ஆம் திகதி 30 ஆண்டு கால யுத்தத்தின் பின் மீள ஆரம்பிக்கப்பட்ட சுன்னாகம் புகையிரத நிலையம், இந்த வருடம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 05ஆம் திகதி 10வது ஆண்டினை நிறைவு செய்துள்ளது. 

கடந்த 10 காலங்களில் மக்களுக்கான பல்வேறு அர்ப்பணிப்பான சேவையினையும் அப்பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டு வருகிறது. 

2019ஆம் ஆண்டு முதல் ஆசன முன்பதிவு வசதிகள் மற்றும் வடபகுதி புகையிரத நிலையங்களில் முதன்முதலாக பயணிகள் நூலகம் என்பன இப்புகையிரத நிலையத்தில் ஆரம்பிக்கப் பட்டதுடன்,  வருங்காலத்தில் பொதிகள் மற்றும் பண்டங்கள் சேவை மற்றும் வாகன பாதுகாப்பு சேவை (vehicle park) என்பனவற்றை மேற்கொள்வதற்கான நடவடிக்கை இதன் புகையிரத நிலைய அதிபராக கடமையாற்றும் ஸ்ரீ.ஸ்ரீவாகீசன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. 

இப்புகையிரத நிலையத்தின் பயணிகளின் அதிகரிப்பினை அவதானித்த பிரதேச மக்கள் மற்றும் அதன் நிலைய அதிபரின் தொடர்பாடல் மூலமாக சுன்னாகம் சூறாவத்தை சீரடி சாயி நிறுவனத்தினராலும், உடுவிலைச் சேர்ந்த அமரர் சா. வாமதேவன் (இளைப்பாறிய புகையிரத சாரதி)  அவர்களின் நினைவாகவும் சுணைணாகம் பிரதேசத்தினை சேர்ந்த அமரர் திரு. க. தில்லைநாதன் (ஸ்ரீதரன் புத்தக சாலை சுண்ணாகம் அவர்களின் தந்தையார்) அவர்களின் நினைவாகவும் மேடைப் பயணிகள் இருக்கைகள் சிலவும் நன்கொடையாக வழங்கப்பட்டன. 

மேலும் சுன்னாகம் கிராம மக்கள் மற்றும் Green Layer அமைப்பு, வடலி ஹோட்டல், தென்னை அபிவிருத்திச் சபை என்பவற்றின் ஒத்துழைப்புடன் 150 கமுகு, 12 மாமரங்கள், மருது, மகிழ் மரங்கள், இலுப்பை, புங்கை, புளி, நாவல், நெல்லி, பலா, தேக்கு போன்ற அருகி வரும் மரங்கள் பலவும் நாட்டப்பட்டு ஊழியர்களால் பராமரிக்கப் படுகின்றன. 

புகையிரத நிலையம் ஆரம்பிக்கப்பட்ட 10 வருடங்களில் கடந்த வருடமே புகையிரத நிலையத்தினை அடையாளப்படுத்தும் வாசல் பெயர்ப்பலகை மற்றும் நுழைவாயில் அரைவட்ட round up pound முதலியனவும்  புகையிரத நிலைய அதிபரின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175...

2025-02-15 13:58:01
news-image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்...

2025-02-15 13:49:53
news-image

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள...

2025-02-15 13:29:22
news-image

மூத்த ஊடக ஆசிரியர் பாரதியின் நினைவு...

2025-02-15 10:38:29
news-image

தமிழகத்தின் மனவளக்கலை பேராசிரியர் டாக்டர் ஞால...

2025-02-14 18:34:09
news-image

கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு...

2025-02-14 16:48:49
news-image

கீரிமலை நகுலேச்சரத்தில் கொடியேற்றம்!

2025-02-13 18:24:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41
news-image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி...

2025-02-12 17:48:53
news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23
news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22