ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையத் தயாராக உள்ளோம் ; ஐக்கிய மக்கள் சக்தியின் ஹர்ஷன ராஜகருணா

13 Jan, 2025 | 04:51 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

ஐக்கிய தேசியக் கட்சியின் திறந்த அழைப்பு உள்ளிட்ட இதர அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைவது குறித்தான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

கடந்த இரு பிரதான தேசியத் தேர்தல்களின் அடைவு மட்டத்தை கருத்திற்கொண்டு இந்த கலந்துரையாடல்களை மேற்கொள்வது சிறந்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

கம்பஹா பகுதியில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினரிடம்  ஐக்கிய மக்கள் சக்திக்கு, ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள திறந்த அழைப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கேள்வி- ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய தேசியக் கட்சியையும்   இணைக்க கலந்துரையாடல்கள் இடம்பெறுகிறதா?

பதில் - ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமல்ல இதர அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைவது குறித்து கலந்துரையாட நாம் எதிர்பார்த்துள்ளோம். 

குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம்.

எனவே இவ்விரு கட்சிகளிலும் உள்ளவர்கள் தங்களது தற்போதைய அரசியல் நிலைமை என்ன என்பது தொடர்பில் அறிந்து கொள்ள வேண்டும். எதேட்சதிகாரமாக செயற்படாமல் அனைவரையும் ஒன்றிணையுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

கேள்வி-இந்த இரு கட்சிகளும் ஒன்றிணைந்தால் தலைமைத்துவத்தில் சிக்கல் நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது அல்லவா?

பதில் -அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள நாம் தயாராக உள்ளோம்.அதில் மாற்றுக் கருத்தில்லை. ஐக்கிய மக்கள் சக்தியே பிரதான எதிர்க்கட்சி என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் அடைவை கருத்திற்கொண்டு இந்த கலந்துரையாடல்களை மேற்கொள்வது சிறந்தது. 

அவ்வாறில்லையெனில் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவால் அல்ல...

2025-02-16 20:42:03
news-image

பிரதான பிரச்சினைகளை மறந்து யு.எஸ்.எயிட் சர்ச்சையை...

2025-02-16 16:53:51
news-image

இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள்...

2025-02-16 23:04:15
news-image

ஐ.தே.க. - ஐ.ம.ச. கூட்டணி பேச்சுவார்த்தைகளிலிருந்து...

2025-02-16 20:41:19
news-image

ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி -...

2025-02-16 20:52:46
news-image

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பணவீக்கம்...

2025-02-16 16:20:02
news-image

சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற...

2025-02-16 21:42:35
news-image

முல்லைத்தீவிற்கு வருகை தந்த பிரதமர்; ஏமாற்றமடைந்த...

2025-02-16 21:44:11
news-image

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் சக்தியாக மீண்டும்...

2025-02-16 21:30:13
news-image

வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு

2025-02-16 21:17:06
news-image

யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே உள்ளூராட்சி...

2025-02-16 19:59:52
news-image

பொதுச்செயலராக சுமந்திரன் நியனம்: இலங்கைத் தமிழரசுக்...

2025-02-16 21:27:42