தயாரிப்பு : ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ்
நடிகர்கள் : ராம்சரண், கியாரா அத்வானி, எஸ். ஜே. சூர்யா , ஜெயராம் சமுத்திரக்கனி அஞ்சலி சுனில் மற்றும் பலர்.
இயக்கம் : ஷங்கர்
மதிப்பீடு: 2.5/5
'இந்தியன் 2' எனும் வணிக ரீதியில் பாரிய வெற்றியை எதிர்பார்த்த அளவுக்கு வழங்காததால் திரையுலகத்தினரின் அதிருப்தியை சம்பாதித்த இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கேம் சேஞ்ஜர்'. 'ஆர் ஆர் ஆர்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான ராம்சரண் கதையின் நாயகனாக இட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என இந்திய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகி இருக்கும் திரைப்படம் பொங்கல் விடுமுறையை குறி வைத்து வெளியாகி இருக்கும் இந்த பொழுதுபோக்கு அம்சமுள்ள திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
கதையின் நாயகனான ராம்சரண் ஆந்திர மாநிலத்தில் பணியாற்றும் ஒரு மாவட்ட ஆட்சியர். இவர் விசாகப்பட்டினம் எனும் மாவட்டத்திற்கு ஆட்சியராக பொறுப்பேற்கிறார். அந்த தருணத்தில் அந்த மாநிலத்தின் முதல்வராக ஸ்ரீகாந்த் இருக்கிறார். அவர் சில மாதங்கள் நேர்மையாக ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறார். ஆனால் அவருடைய எண்ணத்திற்கு எதிராக அவருடைய இளைய மகனான எஸ். ஜே. சூர்யா செயல்படுகிறார். அவர் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் , ஆகியவற்றின் மீது பெரு விருப்பம் கொண்டவராக இருக்கிறார்.
மாவட்ட ஆட்சியர் அரசு துறை அதிகாரி என்பதால் முதல்வரின் விருப்பத்தை செயல்படுத்துகிறார். இதனால் மாவட்ட ஆட்சியரான ராம் சரணுக்கும், முதல்வரின் இளைய மகனான எஸ். ஜே. சூர்யா விற்கும் இடையே பகை மற்றும் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலின் உச்சக்கட்டம் தான் படத்தின் கதை.
ராம் சரண் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பதற்கு முன்பே காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றுபவர். இவரின் அடங்கா கோபத்தை திசை திருப்புவதற்காக காதலி கியாரா அத்வானியின் ஆலோசனையின் படி மாவட்ட ஆட்சியராகிறார். ராம் சரண் காவல்துறை உயர் அதிகாரியாகவும், மாவட்ட ஆட்சியராகவும் மாற்றம் பெறுவதற்கு பின்னணி ஒன்றும் உண்டு. அது இயக்குநர் ஷங்கரின் வழக்கமான சென்டிமென்ட் 'டச்'சுடன் உள்ளது. உணர்வுபூர்வமானதாகவும், ரசிகர்களை கவரக்கூடியதாகவும் அது இருப்பதால் படத்தின் இரண்டாம் பகுதி ரசிக்க முடிகிறது.
ராம்சரண் தந்தை, தனயன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நடிப்பில் வித்தியாசம் காட்டி ரசிகர்களை கவர்கிறார். திரையில் மாயாஜாலம் நிகழ்த்துகிறார். குறிப்பாக எக்சன் காட்சிகளில் இவருடைய ஈடுபாடு ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
இவருக்கு அடுத்ததாக வில்லனாக நடித்திருக்கும் எஸ். ஜே. சூர்யா ரசிகர்களை கவர்கிறார். வழக்கமான வில்லன் வேடம் என்றாலும் தன்னால் முடிந்த அளவிற்கு வித்தியாசத்தை காட்டி நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் கியாரா அத்வானி வழக்கம்போல் கமர்சியல் திரைப்படங்களுக்கான நாயகியாக இரண்டு பாடல்கள் மற்றும் இரண்டு காட்சிகள் மட்டும் நடித்து மறைந்து போகிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி தன் வழக்கமான சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்.
இவர்களைத் தவிர நடித்திருக்கும் அனைவரும் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்கள். ஆனால் இயக்குநர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை துல்லியமாக அவதானிக்காமல் தனக்கு தெரிந்த மற்றும் கற்ற மொத்த வித்தையையும் இறக்கி ரசிகர்களை மீண்டும் சோதித்து இருக்கிறார்.
திரைக்கதையில் சுவராசியத்தையோ அழுத்தமான காட்சியையோ செதுக்காமல் அதனை திரையாக்கத்தில் பிரம்மாண்டத்தை மட்டுமே சேர்த்து பார்வையாளர்களை வியக்க வைக்க இது போதும் என ஷங்கர் தீர்மானித்து விட்டார். இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இயக்குநரின் செயலாக்கமும் நேர் எதிராக இருக்கிறது. இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக உருவாகி இருக்கக்கூடும் என நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்ள வேண்டியது இருக்கிறது. ஏனெனில் ஹீரோயிசம் என்கிற பெயரில் மிகை கற்பனை அதீதமாக இருக்கிறது.
ஒளிப்பதிவு , பாடல்கள் , இசை , பின்னணி இசை , கலை இயக்கம் , கிராபிக்ஸ் , என அனைத்து அம்சங்களும் சர்வதேச தரத்தில் இருக்கிறது. இதனால் ரசிகர்களின் கண்களுக்கும், செவிகளுக்கும் இனிய விருந்து கிடைத்திருக்கிறது. ஆனால்..!? ரசிகர்களின் எதிர்பார்ப்பு புஸ்.
கேம் சேஞ்ஜர் - ராம் சரண் மேஜிக்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM