நடிகர் அஜித் குமார் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருவதுடன் சர்வதேச அளவிலான கார் பந்தயத்திலும் ஈடுபட்டு வருகிறார். துபாயில் நடைபெற்ற 24 ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் தலைமையிலான அஜித்குமார் ரேசிங் அணி 992 பிரிவில் இடம்பெற்று, பந்தயத்தில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது.
இந்தியாவை சார்ந்த ஒரு கார் பந்தய அணி, இதுபோன்ற சர்வதேச கார் பந்தய போட்டியில் பங்கு பற்றி மூன்றாவது இடத்தை வென்றிருப்பது சாதனையாக அவதானிக்கப்படுகிறது. இந்த கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் முதன்முறையாக பங்கு பற்றினார் என்பதும், அவர் பங்கு பற்றிய முதல் பந்தயத்திலேயே அவருடைய அணி மூன்றாவது இடத்தை வென்றிருப்பதும் சாதனையாக கருதப்படுகிறது.
இதை பாராட்டி சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் திரையுலகினரும் , ஏனைய இந்திய திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களும், ரசிகர்களும், கார் பந்தய ஆர்வலர்களும் அஜித் குமாருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக தங்களின் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.
இதனிடையே அஜித் குமார் நடிப்பில் தயாராகி இருக்கும் 'விடாமுயற்சி ' எனும் திரைப்படம் எதிர்வரும் 24 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என திரையுலக வணிக வட்டாரங்கள் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM