கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

நீராடுவதற்கு இரு நண்பர்களுடன் குளத்திற்கு சென்ற கனகாம்பிகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணிம் விஜிதன் என்ற 22 வயது இளைஞரே நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

இரவது சடலம் சுமார் ஓரு மணித்தியாலய தேடுதலின் பின் குளத்தில் இருந்து மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.