இன்றைய தலைமுறையினருக்கு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதிலும், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதிலும் மற்றவர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருக்கிறது. இதில் தான் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முரண்படுகிறார்கள்.
மேலும் இந்த எண்ணம் தவறு என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள். ஏனெனில் மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கை அல்ல. மகிழ்ச்சியும், துயரமும் கலந்தது தான் வாழ்க்கை. மகிழ்ச்சியின் வீரியமும், அடர்த்தியும் அதிகரிக்க வேண்டும் என்றால் அதாவது இன்றைய இளைய தலைமுறையினருக்கு எளிதாக விவரிக்க வேண்டும் என்றால் மகிழ்ச்சியை நீங்கள் உச்சபட்சமாகவும் கட்டுப்பாடு இல்லாமல் அனுபவிக்க வேண்டும் என்றால் துயரத்தின் ஆழத்தை உணர்ந்து இருக்க வேண்டும்.
எவ்வளவு தூரம் நீங்கள் துயரப்பட்டு, துன்பப்பட்டு, கஷ்டப்பட்டு இருக்கிறீர்களோ..! அந்த தருணத்தில் உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கும் அந்த மகிழ்ச்சியின் அனுபவத்தை விவரிப்பதற்கும் வார்த்தைகள் இல்லாமல் அதனை அனுபவிப்பீர்கள்.
இதுபோன்ற மகிழ்ச்சியான அனுபவத்தை நாளாந்தம் வாழ்க்கை முழுவதும் பெற வேண்டும் என்றால் நாளாந்த மேற்கொள்ள வேண்டிய ஆன்மீக விடயங்களை பற்றி எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பின்வரும் எட்டு விடயங்களை முன்மொழிந்திருக்கிறார்கள்.
காலையில் எழுந்தவுடன் கண்களை திறப்பதற்கு முன் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து உங்களது இரு உள்ளங்கைகளையும் ஒன்றிணைத்து அதனை பார்வையிட வேண்டும். அந்த தருணத்தில் உங்களுக்குப் பிடித்த இறைவனின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அவை ஓம் நமோ நாராயணவாக இருக்கலாம் ஓம் நமச்சிவாயவாகவும் இருக்கலாம். ஓம் முருகா என்றும் இருக்கலாம். அது உங்களுடைய விருப்பத்திற்குரியது.
அதனைத் தொடர்ந்து காலை கடன்களை முடித்து நீராடிய பிறகு இறைவனை குறைந்த பட்சம் மூன்று நிமிடமாவது வணங்க வேண்டும். இந்தத் தருணத்திலும் உங்கள் மனதின் விருப்பத்திற்குரிய இறைவனின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
வாரத்தில் ஒரு முறையேனும் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று அங்கு குறைந்தபட்சம் 24 நிமிடங்கள் இறைவனை வழிபடுவதிலோ அல்லது தியானத்திலோ அல்லது அமைதியாகவோ இருக்க வேண்டும்.
நீங்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் அல்லது சொந்த வீட்டில் வசித்தாலும் அக்கம் பக்கத்தில் இருக்கும் முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாத நபர்களிடம் எந்த சிறிய விடயத்திற்காகவும் பகைமை பாராட்டாமல் விட்டுக் கொடுக்க வேண்டும்.
அதேபோல் நாளாந்தம் பசியாறும்போது அதற்கு முன் ஏதேனும் ஒரு உயிருக்கு சிறிதளவு உணவு சமர்ப்பித்து விட்டு அதன் பிறகு பசியாற வேண்டும்.
வீட்டை விட்டு அலுவலகத்திற்கு கிளம்பும் போதோ அல்லது பாடசாலைக்கு புறப்படும் போதோ அல்லது தொழிற்சாலைக்கு செல்லும் போதோ நெற்றியில் குங்குமம், சந்தனம், விபூதி என ஏதேனும் ஒன்றை பூசி கொள்ள வேண்டும்.
இரவு உறங்குவதற்கு முன் கடவுளுக்கு நன்றியை தெரிவித்து விட்டு அன்றைய தினத்தில் நடைபெற்ற அனைத்து நடவடிக்கைகளையும் ஒருமுறை நினைவுப்படுத்திக் கொண்டு, அதில் நல்லனவற்றை அசைபோட்டு மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அல்லனவற்றை அன்று மறந்து விட வேண்டும். இதனைத் தொடர்ந்து உறங்கும் முன் 'சர்வம் கிருஷ்ணார்ப்பணம்' என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்ட எட்டு விடயங்களை மனதில் உறுதியாக பதியமிட்டு அதன்படி நாளாந்தம் கடமையாற்றி வந்தால் உங்களிடம் இறை அருள், இறை ஆற்றல்,ஆகியவை அதிகரித்து மனதில் மகிழ்ச்சியும், ஆரோக்கியத்தில் மேன்மையும் ஏற்பட்டு, ஆயுள் முழுவதும் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM