தெலுங்கு நடிகர் விராட் கர்ணா நடிக்கும் ' நாக பந்தம் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Digital Desk 2

13 Jan, 2025 | 03:57 PM
image

தெலுங்கு திரையுலகின் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான விராட் கர்ணா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது . இதனை 'பாகுபலி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ராணா டகுபதி வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகி வரும் ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தில் விராட் கர்ணா, நபா நடாஷ் ,ஐஸ்வர்யா மேனன், ஜெகபதிபாபு , ஜெயபிரகாஷ்,  முரளி சர்மா, பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு அபே இசையமைக்கிறார். 

சாகசம் கலந்த காவிய படைப்பாக உருவாகும் இந்த திரைப்படத்தை அபிஷேக் பிக்சர்ஸ் மற்றும் நிக் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய படமாக தயாராகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதை நாயகனின் தோற்றம் வீரம் செறிந்ததாகவும், துணிச்சல் மிக்கதாகவும் இருப்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right