தனது பதவியை இடைநிறுத்தியதற்கு நியாயம் கோரி நீதமன்றத்தை நாடவுள்ளார் ஒலிம்பிக் செயலாளர்நாயகம்

13 Jan, 2025 | 03:21 PM
image

(நெவில் அன்தனி)

தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர்நாயகம் மேக்ஸ்வெல் டி சில்வாவின் பதவியை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்த விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே நடவடிக்கை எடுத்துள்ளார்.

தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர்நாயகம் மீது சுமத்தப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சினால் நடத்தப்பட்ட விசாரணை முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர்நாயகத்தை இடைநீக்கம் செய்து விசாரணை நடத்தவேண்டும் என ஒலிம்பிக் குழுவின் நெறிமுறைக் குழு பரிந்துரைத்திருந்தது.

இது இவ்வாறிருக்க, இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான நிதி உதவிகளை இடைநிறுத்துவதாக சர்வதேச ஒலிம்பிக் குழு கடந்த மாதம் அறிவித்திருந்தது.

இந் நிலையில், தன்னை செயலாளர்நாயகம் பதவியிலிருந்து இடைநிறுத்தியதை எதிர்த்து நீதிமன்றத்திடம் நியாயம் கோரவுள்ளதாக மேக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்தார்.

தன்னைப் பதவியிலிருந்து இடைநிறுத்துவதற்கு சட்டப்பூர்வ அடிப்படை எதுவும் இல்லை என்பதை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டவுள்ளதாக அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08