தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ஜீவா, அர்ஜுன் ஆகியோர் இணைந்து முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'அகத்தியா' எனும் திரைப்படத்தில் இடம்பெறும் 'என் இனிய பொன் நிலாவே ..' எனும் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற பாடலின் மறு உருவாக்கம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனுடன் 'அகத்தியா' படத்தின் கதை களத்தையும், கதை ஓட்டத்தையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் அகத்தியா கேமிங் எனப்படும் டிஜிட்டல் விளையாட்டிற்கான பிரத்யேக செயலி ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் 'அகத்தியா' எனும் திரைப்படத்தில் ஜீவா, ராசி கண்ணா, அர்ஜுன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ராதாரவி எட்வர்ட் சொனன்பிளாக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹாரர் ஃபேண்டஸி ஜேனரிலான இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் வாமிந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 31 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு , இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை படக்குழுவினர் தொடர்ச்சியாக விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக 'அகத்தியா கேமிங் ஆப்ஸ்' மற்றும் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு ஆகிய நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது பட குழுவினர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அனீஷ் அர்ஜுன் தேவ் பேசுகையில், '' இன்றைய இளைய தலைமுறையினர் பெரும்பாலானவர்கள் டிஜிட்டல் விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் எளிமையாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்திலும், எங்களுடைய தயாரிப்பில் உருவான 'அகத்தியா' எனும் திரைப்படத்தினை அவர்களுக்கு கேம் வடிவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், இந்த ஆப்ஸை உருவாக்கி இருக்கிறோம். இந்த ஆப்ஸ் முதன்முறையாக விளையாடுபவர்கள் கூட எளிதாக விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த விளையாட்டில் ஜீவா மற்றும் அர்ஜுன் ஏஞ்சல்ஸ் போன்றும் எட்வர்ட் மற்றும் அவரது கூட்டாளிகள் டெவில்ஸ் போன்ற கதாபாத்திரங்களுடன் உருவாக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்களை கவரும். மேலும் இந்த விளையாட்டின் மூலம் அகத்தியா திரைப்படத்தின் தனித்துவமான கதைக்களம் மற்றும் அப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் உண்டாக்கும் '' என்றார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசுகையில், '' விண்டேஜ் பாணியில் ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என இயக்குநர் பா. விஜய் எம்மை அணுகினார். இதனைத் தொடர்ந்து எம்முடைய தந்தையாரின் இசையில் எமக்கு பிடித்த பாடலான 'என் இனிய பொன் நிலாவே..' எனும் பாடலை மறு உருவாக்கம் செய்ய திட்டமிட்டோம். இந்தப் பாடலை விஜய் யேசுதாஸ் மற்றும் பிரியா ஜெர்சின் ஆகியோரை பாட வைத்து, மீண்டும் உயிர்பித்திருக்கிறோம்.
தந்தையார் ஏற்படுத்திய அதே மேஜிக் இந்த பாடலின் மறு உருவாக்கத்திலும் உண்டாக்கும் என நம்புகிறேன். இது பாடல் மட்டுமல்ல கடந்த காலத்தையும் இந்த காலத்தையும் இணைக்கும் இசையின் கொண்டாட்டம். இதனை மீண்டும் உருவாக்கியதற்காக பெருமிதம் அடைகிறேன் '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM