புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் மூவர் கைது

Published By: Digital Desk 2

13 Jan, 2025 | 03:13 PM
image

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில்  குடும்ப பெண் ஒருவரும் , அவரது கணவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12)  கைது  செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில்  கிளிநொச்சியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை  மூன்று மாதங்களாக  அழைத்து வீட்டில் வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். 

பின்னர் குறித்த சிறுமி  கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். குறித்த சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை  அவதானித்த பெற்றோர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர்  சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கிளிநொச்சி வைத்தியசாலை பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை செய்தபோது  குறித்த சிறுமிக்கும்  கிளிநொச்சியில் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

பின்னர் அந்த பெண் மூலமாக புதுக்குடியிருப்பு பெண்ணுக்கும் சிறுமிக்கும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு சிறுமிக்கு பண ஆசையினை காட்டி சிறுமி புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் உள்ள பெண் வீட்டிற்கு அழைக்கப்பட்டு மூன்று மாதங்கள் குறித்த சிறுமி தங்கியிருந்துள்ளார். 

குறித்த பெண் சிறுமியினை வைத்து தொழில் செய்து பணத்தினை சிறுமிக்கு கொடுக்க மறுத்ததனை தொடர்ந்தே சிறுமி வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.

பின்னர் கிளிநொச்சி பொலிஸாரினால் கிளிநொச்சியில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதனை தொடர்ந்து  புதுக்குடியிருப்பு பொலிஸிற்கு தகவல் வழங்கப்படதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு குடும்ப பெண்ணும் கணவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக  விசாரணைகளை புதுகுடியிருப்பு மற்றும் கிளிநொச்சி பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவால் அல்ல...

2025-02-16 20:42:03
news-image

பிரதான பிரச்சினைகளை மறந்து யு.எஸ்.எயிட் சர்ச்சையை...

2025-02-16 16:53:51
news-image

இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள்...

2025-02-16 23:04:15
news-image

ஐ.தே.க. - ஐ.ம.ச. கூட்டணி பேச்சுவார்த்தைகளிலிருந்து...

2025-02-16 20:41:19
news-image

ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி -...

2025-02-16 20:52:46
news-image

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பணவீக்கம்...

2025-02-16 16:20:02
news-image

சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற...

2025-02-16 21:42:35
news-image

முல்லைத்தீவிற்கு வருகை தந்த பிரதமர்; ஏமாற்றமடைந்த...

2025-02-16 21:44:11
news-image

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் சக்தியாக மீண்டும்...

2025-02-16 21:30:13
news-image

வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு

2025-02-16 21:17:06
news-image

யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே உள்ளூராட்சி...

2025-02-16 19:59:52
news-image

பொதுச்செயலராக சுமந்திரன் நியனம்: இலங்கைத் தமிழரசுக்...

2025-02-16 21:27:42