(நமது நிருபர்)
மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான சிறந்தவொரு பொறிமுறையைக் கண்டறிவதற்காக தேசிய கொள்முதல் ஆணையக்குழுவுடன் விரைவில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதர அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மருந்துகள் கொள்முதல் செயல்முறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
மருந்துகள் கொள்வனவுப் பிரச்சினைகள் காரணமாக கேள்வி விலைமனுக்கோரலை நிறுத்துவது பற்றாக்குறையை ஏற்படுத்தும் நிலைமைக்கு கொண்டு செல்கிறது.
மேலும் தரமான மருந்துகளை வாங்குவதை உறுதி செய்ய சிறந்த திட்டங்களும் அவசியமாக உள்ளன என்றுள்ளது.
இதேநேரம், இலங்கையின் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையானது 90 வகையான மருந்துகளின் விலைகளைக் குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், பல மருந்து விற்பனை நிறுவனங்கள் அந்த அறிவிப்புக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால் விலைக் குறைப்பு தாமதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM