சாதனை படைக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- 2' பட பாடல்

Published By: Digital Desk 2

13 Jan, 2025 | 03:13 PM
image

தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்பை அளித்து நடிப்பின் சிகரமாக திகழும் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ' வீர தீர சூரன் - 2 ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'கல்லூரும்'  எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன்- 2' எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன் , சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தற்போது முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின்  காணொளி மற்றும் கிளர்வோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ' கல்லூரும் காத்து என் மேல' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகன் மற்றும் பின்னணி பாடகர் ஹரிசரண் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். 

இளம் தம்பதிகளின் காதல் உணர்வை மெல்லிசையாக வெளிப்படுத்தும் இந்தப் பாடல் இளம் தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த காரணத்தினால் இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right