வலிகள் நீங்கி வளமான நாட்டிற்கும் அதன் மூலம் அழகான வாழ்க்கைக்கு வித்திடுவோம் என இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தைப்பொங்கல் வாழ்த்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
''உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"
என்று மகாகவி பாரதி பாடியதிலிருந்து நாங்கள் உழவுத் தொழிலுக்கு எத்தனை முன்னுரிமையை வழங்கி வந்துள்ளோம் என்பதை உணரக்கூடியதாக உள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பிரதான நோக்கம் எமது தாய் திருநாட்டில் கடந்த காலங்களில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்காத விவசாயத் துறையினை மேம்படுத்தி அதற்கான முன்னுரிமையினை வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதாகும்,
அதன் அடிப்படையில் , ஐம் பூதங்களுடன் உழவுத் தொழிலுக்கு பெரிதும் கைகொடுக்கும் பசு முதலிய உயிரினங்களுக்கும் , இயற்கைக்கும், மனிதருக்கும் இடையிலான வலிமையான உறவினை மென்மேலும் மெருகூட்டி அதனை எம் வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு அன்று முதல் இன்று வரை இயற்கை அன்னைக்கும் சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் முகமாக உலகமெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகள்பன்னெடுங்காலமாக நன்றி செலுத்தும் பெருநாளாக இவ் உழவர் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு தைத்திருநாள் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் செளபாக்கியம் நிறைந்த ஒரு ஆண்டாகவும், பொங்கும் இனிய பொங்கல் போல் யாவரதும் உள்ளம் பூரிப்படைந்து அனைவரது இல்லங்களிலும் எண்ணங்களிலும் மகிழ்ச்சி பெருகட்டும்.
நம் முன்னோர் வாக்குப் எண்ணப் படி 'தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது, மக்கள் மனதில் தொன்று தொட்டு இருந்து வரும் உறுதியான நம்பிக்கையாகும்.
அந்த நம்பிக்கை அனைத்து உறவுகள் மத்தியிலும் கைகூடும் வகையில் மலர்ந்திடும் இந்த தைத்திருநாளை, நம்பிக்கையோடு எதிர் கொண்டு வலிகள் நீங்கி வளமான நாட்டிற்கும் அதன் மூலம் அழகான வாழ்க்கைக்கு வித்திடுவோம்.
பசி போக்கிடும் படைப்பாளியாம் உழவருக்கு ஒரு திருநாள்,உலகம் போற்றும் நன்னாள் இந்த நாளில் தைத்திருநாளை கொண்டாடும் உலக வாழ் அனைத்து தமிழர்களுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சி பொங்கட்டும் மனதிலே ஆனந்தம் பொங்கட்டும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM