பலவருடங்களாக விசாரணை என்னும் பெயரில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரிய கையெழுத்துப் போராட்டம் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (13) இடம் பெற்றது.
குறித்த கையெழுத்து வேட்டையானது போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இதில் பலர் கலந்துகொண்டு கையெழுத்துக்களை இட்டதுடன் குறித்த கையெழுத்து போராட்டமானது வடகிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இடம் பெறவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன்,
அரசியல் கைதிகள் பல வருட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் இவர்கள் விசாரனைகள் ஊடாக பலரும் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இவர்களை புதிய அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்.
தமிழ் மக்களின் குரலை கேட்டு அரசாங்கம் செவிசாய்த்து உடனடியாக விடுதலை செய்யகோரியே இந்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என்றார்.
ஐந்து ஆண்டுகள் தொடக்கம் முப்பது ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை இந்த அரசாங்கம் சுதந்திர தினத்தன்றாவது விடுதலை செய்ய வேண்டும். ஜனாதிபதி யாழ் மண்ணில் வைத்து தேர்தலின் போது வாக்குறுதி அளித்ததை போன்று பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரிடத்தில் கேட்டு கொள்கின்றோம்.
இந்த கோரிக்கையை சட்டமா அதிபர்,நீதியமைச்சர், ஜனாதிபதியிடமும் கையளிக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM