இன்று சீனா செல்கிறார் ஜனாதிபதி அநுர குமார!

Published By: Digital Desk 2

13 Jan, 2025 | 12:07 PM
image

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (13) பிற்பகல் நாட்டிலிருந்து பயணமாகிறார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை செவ்வாய்க்கிழமை (14) முதல் 17ஆம் திகதி வரை சீனாவுக்கு  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி கியாங் (Li Qiang) மற்றும் சீன இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார்.

இதன்போது சீனாவில் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைசார் பல கள விஜயங்களிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதோடு பல உயர்மட்ட வர்த்தகக் கூட்டங்களிலும் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளின்போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.

ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் அநுர குமார திசாநாயக்க மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவினை மேலும் வலுப்படுத்துவதில் ஜனாதிபதியின் சீன விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் ஊடாக இரு தரப்புகளுக்கும் இடையே பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-10 06:00:05
news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46