வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிராடோவை கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
அண்மையில் இலங்கை - முல்லைத்தீவு கடலில் ரோஹிங்கிய முஸ்லிம்களை ஏற்றிவந்த படகானது தமக்கான அடைக்கலம் தேடி வருகை தந்தது.
இந்தப் படகில் வந்த சுமார் நூற்றுக்கு அதிகமானவர்கள் விமானப்படையின் கண்காணிப்பில் தடுத்துவைக்கப்பட்டு அவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றன.
ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்களை நாடு கடத்த வேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்புக் குழு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
இந்தப் போராட்டத்தில் பங்குபற்றிய வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிராடோ, மியன்மாரில் பாதுகாப்பு இல்லை; தமக்கு பாதுகாப்புத் தருமாறு அடைக்கலம் கோரிய ரோஹிங்கிய முஸ்லிம்களை இலங்கை அரசாங்கம் மியன்மாரிடம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தியிருந்தார்.
அவர்களை இலங்கையிலிருந்து பாதுகாப்பாக இன்னொரு நாட்டில் சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்களின் கண்காணிப்பில் வைத்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வுத் தலைமை அலுவலகத்துக்கு வருமாறு ஜான்சன் பிரிராடோவுக்கு அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM