(நமது நிருபர்)
கொள்வனவு செய்யப்படும் மருந்துகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் விரைவில் பல ஆய்வகங்களை நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மருந்துகளின் தரம் தொடர்பில் குறிப்பிட்ட முறைப்பாடுகளுக்கு பதிலளிப்பதை விடவும், பொதுமக்களுக்கு மருந்துகளை விநியோகம் செய்வதற்கு முன்னதாக பரிசோதனை செய்வதே மேலானது.
ஆகவே மருந்துகளை ஆய்வு செய்வதற்கான பல ஆய்வகங்களை திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
மருந்து இறக்குமதி தொடர்பாக நிறுவனமொன்றுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதேநேரம், இலங்கையின் சுகாதார அமைப்பு மற்றும் மருந்து விநியோக செயல்முறைகள் விரிவானவை என்பதை அடிப்படையாகக் கொண்டு அவதானமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM