இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக டிரவிஸ் ஹெட் களமிறங்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது . முதலாவது டெஸ்ட் போட்டி 29ம் திகதி ஆரம்பமாகின்றது.
இந்த டெஸ்டில் அவுஸ்திரேலிய அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக டிரவிஸ் ஹெட் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அவுஸ்திரேலியாவின் தெரிவுக்குழுவின் தலைவர் ஜோர்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய அணியி;ன் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.
அதிரடி ஆட்டக்காரர் சாம் கொன்ஸ்டாஸ் அணியில் இடம்பெற்றுள்ளார் அவரது முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணம் இது.
இந்தியாவிற்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட்களில் விளையாடிய அவர் அடித்து ஆடி கவனத்தை பெற்றார் எனினும் அவரது வழமையான பாணி இதுவல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ஜஸ்பிரிட் பும்ராவை நிலைகுலையச்செய்வதற்காகவே அவரை அடித்து ஆடும்படி கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ள தெரிவுக்குழுவின் தலைவர் 19 கொன்ஸ்டஸ் ஆட்டத்தின் போக்கை கணிப்பதில் திறமையுள்ளவராக காணப்படுகின்றார்,இதன் காரணமாக அவர் இலங்கையில் சிறப்பாக விளையாடக்கூடும் என தெரிவித்துள்ளார்.
அவர் இன்னமும் இலங்கையில் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.
ஒருவர் ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளாதவரை அவர் அதனை எப்படி எதிர்கொள்வார் என குறிப்பிடமுடியாது என தெரிவித்துள்ள ஜோர்ஜ் பெய்லி கொன்ஸ்டஸ் வேகமாக கற்றுக்கொள்கின்றார் தகவல்களை உள்வாங்குகின்றார் என தெரிவித்துள்ளார்.
அவர் அவுஸ்திரேலியாவில் சுழற்பந்தை ஆடிய விதத்தை அடிப்படையாக வைத்தும் உலகின் வேறு சில பகுதிகளில் விளையாடிய விதத்தை அடிப்படையாக வைத்தும் அவர் இலங்கையில் விளையாடுவதற்கான உத்திகளை கொண்டுள்ளார் என கருதுகின்றேன் என தெரிவுக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
டிரவிஸ் ஹெட் இலங்கையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார்,என பெய்லி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM