இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் ரோகித்சர்மா கவாஸ்கர் போர்டர் டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்திருந்ததாகவும் எனினும் அவரின் நலன் விரும்பிகள் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியதாகவும் டைம்ஸ் ஒவ் இந்தியா தெரிவித்துள்ளது.
இது குறித்து டைம்ஸ் ஒவ் இந்தியா மேலும் தெரிவித்துள்ளதாவது.
அடிலெய்ட் பிரிஸ்பேர்ன் டெஸ்ட்களில் மத்தியவரிசை ஆட்டக்காரராக களமிறங்கிய பின்னர் ரோகித்சர்மா பொக்சிங் டே டெஸ்டில் மீண்டும் ஆரம்பவீரராக களமிறங்கினார் இதனால் சுப்மன்கில் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
எனினும் இது ரோகித்சர்மாவிற்கு உதவியாக அமையவில்லை.அவர் இரண்டு இனிங்ஸ்களிலும் சிறப்பாக ஆடவில்லை இந்தியா தோல்வியை தழுவியது.
எம்சிஜிக்கு பின்னர் ரோகித் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது என தீர்மானித்தார்,வெளியிலிருந்து அவரது நலன்விரும்பிகள் அந்த முடிவை மாற்றும்படி அழுத்தம் கொடுக்காமலிருந்திருந்தால் நாங்கள் ஓய்வு குறித்த மற்றுமொரு அறிவிப்பை கேள்விப்பட்டிருப்போம் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இறுதியாக தலைமை தாங்கிய ஆறு டெஸ்ட்களில் ஆறிலும் தோல்வி என்ற நிலை காரணமாகவும் ஐந்து டெஸ்ட்களில் 31 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்ததாலும் மெல்பேர்ன் டெஸ்டினை தொடர்ந்து ரோகித் சர்மா ஓய்வு குறித்து தீர்மானித்திருந்தார்,
எனினும் நலன்விரும்பிகளின் அழுத்தத்தினால் சிட்னி டெஸ்டிற்கு முன்னர் அவர் தனது மனதை மாற்றினார், ஆனால் இது தலைமை பயிற்றுவிப்பாளர் கவுதம் கம்பீருக்கு பிடிக்கவில்லை இறுதி டெஸ்டில் ரோகித்சர்மா விளையாடவில்லை.
ஆனால் கம்பீருக்கும் ரோகித்சர்மாவிற்கும் இடையில் மனக்கசப்பு நீடிக்கின்றது
இறுதிடெஸ்டில் அணித்தலைவர் விளையாடுவது குறித்த கவுதம் கம்பீரின் கருத்து பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது,மேலும் இறுதி டெஸ்டிற்கான பயிற்சியின் போது ரோகித்சர்மா விளையாடிய விதம் ஏதோ நடக்கப்போகின்றது என்பதை உணர்த்தியது,.
இறுதி டெஸ்டிற்கான 15 பேர் கொண்ட அணியில் ரோகித்சர்மாவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை,ஆனால் ரோகித்சர்மா தான் எங்கும் செல்லவில்லை என்பது குறித்து உறுதியளித்திருந்தார்.
ஸ்டார் ஸ்போர்ட்சிற்கு வழங்கிய பேட்டியில் தனது முடிவுகள் குறித்து எடுக்கும் அளவிற்கு தனக்கு முதிர்ச்சி உள்ளது என குறிப்பிட்டிருந்த ரோகித்சர்மா ஓட்டங்களை பெற முடியாதபோது விளையாடும் அணியில் இடம்பெறுவது பொருத்தமற்ற விடயம்என குறிப்பிட்டிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM