இந்தியாவின் ராே உளவு சேவையைச்சேந்த 400பேருக்கும் அதிகமானவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதை தேடிபார்க்க வேண்டும் - துமிந்த நாகமுவ

Published By: Vishnu

13 Jan, 2025 | 08:11 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இந்தியாவின் ராே உளவு சேவையைச்சேந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதை தேடிப்பார்க்க வேண்டும் என மக்கள் போராட்ட குழுவின் அமைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாரித்த வேலைத்திட்டத்தை எந்தவித மாற்றமும் இல்லாமல் அதனையும்விட சிறந்தமுறையில் முன்னெடுத்துச்செல்வதை காணமுடிகிறது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கூட்டு பிரகடனம் ஒன்றை மேற்கொண்டார். அதில் வலுசக்தி ஊடாக இந்தியாவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதாக தெரிவித்திருந்தார். அதேபோன்று இலங்கையுடன் மேலும் பல வேலைத்திடங்களுக்கு தயாராக வருவதாக இந்தியா தெரிவித்திருந்தது.

இலங்கை மின்சாரசபை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க சட்டம் ஒன்றை அனுமதித்தார். குறித்த சட்டத்துக்கு தற்போதுள்ள அரசாங்கம் எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்தது. மின்சார கட்டமைப்பை இந்தியாவுடன் சம்பந்தப்படுத்துவதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருந்து வந்தது. ஆனால் அரசாங்கம் தற்போது இந்தியாவுடன் சூது பொருளாதாரம் ஒன்றையே மேற்கொள்ளப்போகிறது. அதாவது சூது விளையாடி பணம் சம்பாதிக்கும் பொருளாதாரத்தை தயாரிக்கவே முயற்சிக்கிறது.

சீனாவிடம் கடன் பெற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதன் விளைவு என்ன என்பதை எங்களுக்கு கண்டுகொள்ள முடியும். துறைமுகத்தை நிர்மாணிக்க பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாமல் இறுதியில் துறைமுகத்தை சீனாவுக்கு விற்பனை செய்தார்கள். அதேநிலையே இந்தியாவுடனும் எங்களுக்கு ஏற்படும்.

அத்துடன் அதானிக்கு உலகில் எங்கு பிரச்சினை இருந்தாலும் பரவாயில்லை, நாங்கள் இங்கு அதானியுடன் பணியாற்றுவோம் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இது யாரும் கேட்டதற்கு ஜனாதிபதி தெரிவித்த ஒன்று அல்ல. இது முன்கூட்டிய அறிவிப்புகள்.

அதேபோன்று எட்கா ஒப்பந்தத்துக்கு 2016ல் பாரிய எதிர்ப்பு வந்தது. இறுதியில் அந்த ஒப்பந்ததை வாபஸ்பெற்றுக்கொண்டது. அந்த எதிர்ப்புக்கு மக்கள் விடுதலை முன்னணி பாரியளவில் முன்னின்று செயற்பட்டு வந்ததை நாங்கள் கண்டோம். ஆனால் மீண்டும் அந்த எட்கா ஒப்பந்தம் பேச்சுக்கு வந்துள்ளது.

சில சந்தர்ப்பங்களில் இந்தியா இலங்கையின் தேசியவாத அரசியலை நெருக்கடிக்குள்ளாக்க செயற்பட்டு வருவதாக எமக்கு நினைக்க தோன்றுகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் திடீரென தோன்றினார். இப்போது அவர் இல்லை. ஆனால் இனறு வடக்கின் பேச்சாளராக செயற்பட்டு

வருவது யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகியுள்ள வைத்தியர் அர்ச்சுனா. அர்ச்சுனா போன்றவர்களை கொண்டுவந்து இந்தியா என்ன செய்யப்போகிறது என எமக்கு தெரியாது.

அதேநேரம் உத்தியோகபூர்வமற்ற தகவலின் பிரகாரம் இந்தியாவின் ராே உளவு சேவையைச்சேந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் என்பதை நாங்கள் தேடிப்பார்க்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51
news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41