மென்செஸ்டர் SA ஏற்பாட்டில் அழைப்பு கால்பந்தாட்ட பயிற்சியக அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்டம் நாளை ஆரம்பம்

Published By: Vishnu

12 Jan, 2025 | 10:09 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு, மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம் ஏற்பாடு செய்துள்ள அங்குரார்ப்பண கால்பந்தாட்டப் பயிற்சியக அணிகளுக்கு இடையிலான லீக் முறை கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் திங்கட்கிழமை (13) காலை நடைபெறவுள்ள கோலாகல ஆரம்ப விழா வைபவத்துடன் தொடங்கவுள்ளது.

கொழும்பில் இயங்கும் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம் (Manchester Soccer Academy), கலம்போ எப்.சி. கால்பந்தாட்டப் பயிற்சியகம், சோண்டர்ஸ் கால்பந்தாட்டப் பயிற்சியகம், ஜாவா லேன் கால்பந்தாட்டப் பயிற்சியகம், மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம் - இராஜகிரிய கிளை, பார்சிலோனா கால்பந்தாட்டப் பயிற்சியகம், கலம்போ யூத் கால்பந்தாட்டப் பயிற்சியகம் ஆகியவற்றின் 14 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட 14 அணிகள் இப் போட்டியில் பங்குபற்றுகின்றன.

கடந்த சில வருடங்களாக இலங்கையில் உயர் மட்ட கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்படாத நிலையில் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம் ஏற்பாடு செய்துள்ள  14 மற்றும் 16 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்டப் பயிற்சியக அணிகளுக்கு இடையிலான  போட்டி இளையோர் மத்தியில் கால்பந்தாட்டப் புத்தெழுச்சியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

இலங்கை கால்பந்தாட்டத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் குறிக்கோளுடன் இப் போட்டியை மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம் ஏற்பாடு செய்துள்ளதாக பயிற்சியகத்தின் ஸ்தாபகத் தலைவரும் உரிமையாளருமான ஜோர்ஜ் ஒகஸ்டின் தெரிவித்தார்.

'இலங்கையில் இளம் கால்பந்தாட்ட வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் குறிக்கோளுடனும் கால்பந்தாட்டத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்  குறிக்கோளுடனும்   கால்பந்தாட்டப் பயிற்சியக அணிகளுக்கு இடையிலான இப் போட்டியை நடத்துவதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

இப் போட்டியை நடத்த நாங்கள் கடந்த 2 வருடங்களாக திட்டமிட்டுவந்தோம். வருடந்தோறும் மூன்று கட்டங்களில் கால்பந்தாட்டப் பயிற்சியகங்களுக்கு இடையிலான போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக 14 மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகள் ஜனவரி 13ஆம் தியதியிலிருந்து பெப்ரவரி 22ஆம் திகதிவரை நடைபெறும். 8 மற்றும் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட கால்பந்தாட்டம் ஏப்ரல் மாதம் நடத்தப்படும். வருட இறுதியில் 19 மற்றும் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான கடைசிக் கட்ட கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்படும். இப் போட்டிகளை நடத்த எமக்கு அனுமதி வழங்கிய இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் (FFSL) தலைவர் ஜஸ்வர் உமருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இப்போட்டியை வருடா வருடம் நடத்த திட்டமிட்டுள்ளோம்' எனக் கூறினார்.

இப் போட்டி தொடரபாக பேசிய இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர், 'இளையோர் கால்பந்தாட்ட மேம்பாட்டிற்காக FFSL அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. எமது இந்த முயற்சிக்கும் அர்ப்பணிப்புக்கும் இந்தக் கால்பந்தாட்டப் போட்டி ஒரு சான்றாகும். மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் இந்த முயற்சியை ஏனைய பயிற்சியகங்களும் பின்பற்றும் எனவும் அடுத்த கால்பந்தாட்டத் தலைமுறையினரை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்க இந்தப் போட்டி பெரிதும் உதவும் எனவும் நம்புகிறேன்' என்றார்.

இதேவேளை, பொதுவாக கடந்த காலங்களில் பயிற்சியகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டிகள் சிறார்களை மிகழ்விக்கும் வகையில் திருவிழாக் கோலமாக இரண்டு தினங்களுக்கு கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்பட்டுவந்தது.

ஆனால், மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகம் ஏற்பாடு செய்துள்ள FFSL தலைவர் கிண்ண இளையோர் கால்பந்தாட்டம் லீக் அடிப்படையில் போட்டித்தன்மை மிக்கதாக நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று லீக் முறையில் எதிர்த்தாடும். போட்டி நேரம் தலா 25 நிமிடங்களைக் கொண்ட 2 பகுதிகளாக மொத்தம் 50 நிமிடங்ளைக் கொண்டிருப்பதுடன் வழமைபோல்  ஒவ்வொரு அணியிலும் 11 வீரர்கள் இடம்பெறுவர்.

போட்டிகள் நாளை ஆரம்பம்

போட்டியின் முதலாம் நாளான நாளை திங்கட்கிழமை (13) காலை 7.30 மணிக்கு ஆரம்ப விழா வைபவம் நடைபெறுவதுடன் அதனைத் தொடர்ந்து 9.00 மணிக்கு நடைபெறவுள்ள ஆரம்பப் போட்டியில் 14 வயதுக்குட்பட்ட மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியக ஏ அணியும் ஜாவா லேன் கால்பந்தாட்டப் பயிற்சியக அணியும் விளையாடவுள்ளன.

நாளைய தினம் மாலை 5.30 மணிவரை 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான 6 போட்டிகளும் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான 6 போட்டிகளும் நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து அடுத்த வாரத்திலிருந்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்களிலும் தலா 2 போட்டிகள் வீதம் பெத்தகான கால்பந்தாட்டப் பயிற்சியக மைதானத்தில் நடத்தப்படும்.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு வயது பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

14 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான இறுதிப் போட்டிகள் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் பெப்ரவரி 22ஆம் திகதி பிற்பகல் நடைபெறும்.

14 வயதுக்குட்பட்ட அணிகளின் தலைவர்கள்

பார்சிலோனா - ரெயான்

கலம்போ யூத் - எம்.எச். சக்கூர்

கலம்போ எவ்.சி. - ஏ.ஆர். நலீம்

ஜாவா லேன் - எம். ஏ. கார்த்தி

சோண்டர்ஸ் - ஓ. மலித் லியனகே

மென்செஸ்டர் - யூ. சாலித்

மென்செஸ்டர் (இராஜகிரிய) - ஏ. அஹமத்

16 வயதுக்குட்பட்ட அணிகளின் தலைவர்கள்

பார்சிலோனா - எம். இஸியான்

கலம்போ யூத் - எம். ஏ. அக்ரம்

கலம்போ எவ்.சி. எம். ஐ. மொஹமத்

ஜாவா லேன் - எம். ஐ. ஷய்த்

மென்செஸ்டர் - எச். எம். ஆஷிப்

மென்செஸ்டர் (இராஜகிரிய) - ஏ. பி. இம்ரான்

பரிசுகள்

இந்த சுற்றுப் போட்டியில் இரண்டு வயது பிரிவுகளிலும் சம்பியனாகும் அணிகளுக்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் கிண்ணத்துடன் தலா ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசு, பதக்கங்கள் என்பன வழங்கப்படும்.

இப் பிரிவுகளில் இரண்டாம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு கிண்ணங்களுடன் தலா 50,000 ரூபா பணப்பரிசு, பதக்கங்கள் என்பன வழங்கப்படும்.

அத்துடன் நேர்தியான விளையாட்டு (Fair Play), சிறந்த வீரர், சிறந்த கோல்காப்பாளர், பெறுமதிவாய்ந்த வீரர் ஆகிய விருதுகளும் வழங்கப்படும்.

PHOTOS 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08