(செ.சுபதர்ஷனி)
சுகாதார அமைச்சின் 16 மாடிகளைக் கொண்ட புதிய அலுவலக வளாக கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்யுமாறு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு, காசல் வீதி மகப்பேற்று வைத்தியசாலைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சுகாதார அமைச்சின் புதிய 16 மாடி அலுவலக கட்டடத் தொகுதியின் நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமையை கடந்த சனிக்கிழமை நேரில் சென்று ஆராய்ந்ததன் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு அறிவுருத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார அமைச்சின் புதிய அலுவலக கட்டிடத் தொகுதியின் நிர்மாணப் பணிகளை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்வதுடன், குறித்த கட்டிடத்தின் 7 மாடிகளுக்கான பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வருடத்துக்குள் பூர்த்தி செய்வது அவசியம். கடந்த 2016ஆம் ஆண்டு இக்கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் கோவிட்-19 தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் அரசாங்கத்தின் நிதியை கொண்டு மீண்டும் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, தனியார் கட்டிடம் ஒன்றில் வாடகை செலுத்தி சுகாதார அமைச்சின் ஒரு பகுதி தனது கடமைகளை முன்னெடுத்து வருகின்றது. ஆகையால் குத்தகை காலத்தை மேலும் நீடிக்காமல் புதிய கட்டிடத்திற்கு அலுவலகங்களை இடம் மாற்றுவதற்கான அடிப்படை உரிய அதிகாரிகள் திட்டங்களை விரைவில் தயாரிப்பது அவசியம்.
இக்கட்டிடத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளையும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை உடனடியாக மத்திய பொறியியல் ஆலோசனை பணியகம் தயாரிக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM