1995 ஆம் ஆண்டு உலகில் அதிகளவில் தற்கொலைகள் இடம்பெறும் நாடாக இலங்கை பதிவாகியிருந்தது. இந்நிலைமை தொடர்ச்சியாக குறைவடைந்த போதிலும், தற்கொலைக்கு முயற்சிக்கும் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை. 

இந்நிலைமை, உணர்வு ரீதியாக ஆதரவு தேவைப்படுவோருக்கு ஆதரவளிப்பதற்கான தேசிய தேவைப்பாடு நிலவுவதை தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

1996 இல் விசேட ஜனாதிபதி பணிக் குழுவினால் தற்கொலை தடுப்பிற்கான தேசிய கொள்கை அமைக்கப்பட்டதிலிருந்து மன உளைச்சல், குடி மற்றும் போதைபொருள் பாவனை, சவால்களை எதிர்க்கும் திறனின்மை போன்றவை இலங்கையில் தற்கொலைகள் இடம்பெறுவதற்கான காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை சுமித்ரயோ ஒழுங்கு செய்திருந்தது. 

தனிமை, மன உளைச்சல், ஏமாற்றம் மற்றும் உணர்வு ரீதியான ஆதரவு தேவைப்படுவோரை தோழமையுடனும், அதிகாரமளித்தல் ஊடாகவும் தற்கொலைகள் தடுப்பதில் முன்னோடியாக சுமித்ரயோ திகழ்கிறது. இதுவொரு இலவச மற்றும் முற்றிலும் இரகசியத்தன்மை கொண்ட சேவையாகும். சுமார் 100 தொண்டர்களைக் கொண்ட கொழும்பு நிலையத்தின் ஊடாக நேரடியாகவும் தொலைபேசி, கடிதம் மற்றும் மின்னஞ்சல் ஊடாகவும் வருடாந்தம் 8000 இற்கும் மேற்பட்ட அழைப்புகள் ஏற்படுத்தி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வருடம் முழுவதும் அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். உதவிகள் தேவைப்படுவோர் 262692909, 2683555, 2696666 எனும் இலக்கங்கள் ஊடாகவோ அல்லது 60 பி, ஹோர்டன் பிளேஸ், கொழும்பு 7 அல்லது மின்னஞ்சல்: sumithra@sumithrayo.org ஊடாகவோ உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.

கஷ்டங்கள், தனிமை, விரக்தி மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை செவிமடுப்பதுடன் தன்னை புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் எவரும் இல்லை எனும் உணர்வை கொண்டவர்களுடன் தோழமையுடன் சுமித்ரயோ பழகி வருகிறது. தொண்டர் குழுக்களினால் சேவைகள் வழங்கப்படுவதுடன், உணர்வு ரீதியாக மன வேதனையில் சுழல்பவர்களுடன் தோழமையுடன் பழகுவதற்காக தொண்டர்கள் மிகக்கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இந்த தொண்டர்கள் உளவியல் ஆலோசகர்கள் அல்ல. ஆனால் நட்பு பாராட்டக்கூடியவர்களாவர். தோழமையுடன் பழகுதல் என்பது பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை நேர்மறையாக கேட்பது ஓர் கலை என்பதுடன், வாழ்க்கைப் பிரச்சனைகளை நேர்மறையாக கையாளக்கூடியவராக பாதிக்கப்பட்டவரை மாற்றுவதே இவர்களின் பணியாகும்.

திருமண, குடும்ப மற்றும் வீட்டு வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தொந்தரவுகள், உறவுப் பிரச்சனைகள் ஏமாற்றம், தனிமை மற்றும் குறைந்த சுய மரியாதை கொண்ட அனைத்து வயதுப்பிரிவினரும் சுமித்ரயோ அமைப்பில் தமக்கான உதவிகளைப் பெற்று வருகின்றனர். அழைப்பவர் குறைகளை சொல்வதுடன் தொண்டர்களினால் தொடர்ச்சியாக அழைப்புகள் ஏற்கப்பட்டு செவிமடுக்கப்படுகின்றன. விரக்தி மற்றும் துயரத்தை உருவாக்கும் உணர்வுகள் அடையாளப்படுத்தப்படும்.

அறிக்கை சமர்பிக்கப்பட்ட போதிலும் அழைப்பவர் பகுத்தறிவு(மூளை மற்றும் இதயத்தை சமனாக  2 பேணக்கூடியவர்) தெரிவுகள் அடையாளம் கண்டு கலந்துரையாடப்படும். இத்தெரிவுகளில் ஒன்றிரண்டு மீது அழைப்பாளர் கவனம் செலுத்துவதுடன், தற்போதைய உணர்வுகளிலிருந்து விடுதலையை பெறுவர். 

அழைப்பை மேற்கொள்பவரை ஊக்குவித்து வாழ்வை மேம்படுத்தக்கூடிய தெரிவுகளை வழங்குவதே நட்பு பாராட்டுவதன்(befriend) இலக்காகும். தனது வாழ்க்கை குறித்த முடிவுகளை எடுத்தல் மற்றும் எந்தவொரு நேரத்திலும் அழைப்பை துண்டித்தல் உள்ளிட்ட சொந்த முடிவுகளை எடுப்பதற்கான சுதந்திரத்தை அழைப்பாளர் கொண்டிருப்பார்.

அனுதாபத்திற்கு பதிலாக புரிந்துகொள்ளல், அறிவுரைக்கு பதிலாக அதிகாரமளித்தல், முழுமையான இரகசியத்தன்மையுடன் அனைத்தையும் செவிமடுக்கக்கூடிய நண்பர் ஒருவரை பெறக்கூடிய இடமாகவே சுமித்ரயோ அமைப்பு காணப்படுகிறது. இங்கு சேவைகளை பெற்றவர்கள் தங்களது துயர்களுக்கான பெரிய நிவாரணமாகவும் வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்கு பதிலாக ஏனைய தெரிவுகளை அடையாளம் கண்டு கொள்வதற்கு அளப்பரிய உதவியாக அமைந்திருந்தது என்பதை உறுதி செய்திருந்தனர்.

தற்கொலை முயற்சிக்கு நிச்சயமாக ஒரு காரணியோ அல்லது நிகழ்வோ காரணமாக அமையாது. இதற்கு சிக்கலான பல காரணங்கள் தொடர்புடையதாக இருக்கும். உறவு நிராகரிப்பு, தாங்கமுடியாத துயரம், மது மற்றும் போதைபொருட்களின் அதிகப்படியான பாவனை, தீராத நோய்கள், முந்தைய தற்கொலை முயற்சிகள், மன அழுத்தம், மன நோய் மற்றும் சமாளிக்க இயலாமை போன்ற காரணிகளும் தற்கொலைக்கான அபாயத்தை அதிகரிக்கின்றன. மூளை, மரபியல், உளவியல் பண்புகள் மற்றும் சமூக படைகள் அனைத்தும் இத்தகைய உணர்வுகளில் பங்களிப்பு செலுத்துகின்றன.

சுமித்ரயோ அமைப்பில் தொண்டர்களாக சேவையாற்ற எந்தவொரு விசேட தகுதியோ அல்லது அனுபவமோ தேவையில்லை. கருணை, பராமரிப்பு மற்றும் பிரச்சினைகளை ஏகமனதாக செவிமடுப்பதற்கான ஆவல் ஒன்றே போதுமானது. “வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைக்கக்கூடிய ஓர் தொடுகை, ஓர் சிரிப்பு, ஓர் அன்பான வார்த்தை, ஓர் செவிமடுத்தல், உண்மையான ஓர் பாராட்டு அல்லது சிறு அக்கறை போன்றவற்றின் சக்தியை எப்போதும் நாம் குறைவாகவே மதிப்பிட்டு வருகிறோம்” என சுமித்ரேயோ அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.