பிரிட்டனின் தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி புகழ்பெற்ற ரோரி கலம் சைக்ஸ் லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
1990களில் கிடிகப்பெர்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி பிரபலமான ரோரி கலம் சைக்ஸ் மாலிபுவில் உள்ள அவரது பங்களாவில் கார்பன்மொனாக்சைட் வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்தார் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
பெருமூளைவாத நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை காட்டுதீயிலிருந்து காப்பாற்றுவதற்கு தான் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை என தாயார் ஷெலி சைக்ஸ் தெரிவித்துள்ளார்.
எனது மகன் வீடு தீயில் சிக்குண்டது,நான் அவரை காப்பாற்ற முயற்சித்தேன் ஆனால் தண்ணீர் வரவில்லை அது நிறுத்தப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளுர் தீயணைப்பு பிரிவினரின் உதவியை கேட்பதற்காக ஓடினேன்,ஆனால் நான் திரும்பிவந்தபோது மகன் இருந்த பகுதி முற்றாக தீக்கிரையாகியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
அம்மா என்னை விட்டுவிட்டுபோகாதே என அவன் அலறினான், எந்த தாயும் அவ்வாறான சூழ்நிலையில் தனது மகனை விட்டுவிட்டு போகமாட்டாள்,எனது கை உடைந்திருந்தது அதனால் அவரை தூக்கமுடியவில்லை என தாயார் தெரிவித்துள்ளார்.
எனது அழகான மகனின் மரணத்தினால் நான் முற்றாக மனதுடைந்துள்ளேன் என சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ள அவர் லாஸ்வேர்ஜெனெஸ் நீரை நிறுத்திவிட்டதால் என்னால் தீயை அணைக்க முடியவில்லை 50 தீயணைப்பு வீரர்கள் இருந்தும் அவர்களிடம் தண்ணீர் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM