புத்தளம் - முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்துலு ஓயா பிரதேசத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையமொன்றில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் சிலாபம் விஜயகடுபொத பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.
இந்த நபர் மேற்படி நிறுவன அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டுள்ளார்.
மறுநாள் காலை, அலுவலக ஊழியர்கள் வந்து பார்த்தபோது, அவர் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகவும் அலுவலகத்திலிருந்து கிட்டத்தட்ட 14 இலட்சம் ரூபா திருடப்பட்டுள்ளதாகவும் நிறுவன உரிமையாளர் முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை, இக்குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (11) பத்துலு ஓயா பிரதேசத்தில் முந்தல் பொலிஸ் நிலைய அதிகாரிகளாலும் புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினராலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடமிருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 141,000/= ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் 37 வயதுடைய பத்துலு ஓயாவைச் சேர்ந்த அதே நிறுவனத்தின் ஊழியர் எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நீதவான் விசாரணைகளின் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM