ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் முன்னணி உற்பத்தியான க்ளோகாட், பாடசாலை மாணவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கன உலோகத்தினாலான தண்ணீர் ஃபில்டர்களை வழங்கும் திட்டமொன்றினை முன்னெடுத்திருந்தது.
ஆரோக்கியமான வாழ்வுக்கு சுத்தமான குடிநீர் அத்தியாவசியத் தேவையாகும். இருப்பினும் அனைத்து இலங்கையராலும் பாதுகாப்பான குடிநீரை பெற முடியாத நிலைமையே நிலவுகிறது. இந்த நிலைமையினால் ஏற்படக்கூடிய சுகாதாரக் கேடுகளை நன்குணர்ந்துள்ள ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் முன்னணி உற்பத்தியான க்ளோகாட், பாடசாலை மாணவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கன உலோகத்தினாலான தண்ணீர் ஃபில்டர்களை வழங்கும் திட்டமொன்றினை முன்னெடுத்திருந்தது. இந்த சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தை க்ளோகார்ட் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் தூண்டுதலால் முன்னெடுக்கப்பட்டது.
நீண்ட புத்துணர்ச்சியான சுவாசத்தை வழங்கக்கூடிய இயற்கை மூலப்பொருட்கள் மற்றும் கிருமிகளுக்கு எதிராக போராடும் துத்தநாக தொழில்;நுட்பத்துடன் உற்பத்தி செய்யப்பட்டுள்ள க்ளோகாட் ஃரெஷ் ப்ளாஸ்ட் எனும் ஜெல் பற்பசையை இலங்கையில் அறிமுகப்படுத்திய முதலாவது நிறுவனமாக ஹேமாஸ் மனுபக்டரிங் திகழ்கிறது.
புத்துணர்ச்சியான சுவாசம் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதுடன், விசேடமாக இளைஞர்களுக்கு புதிய விடயங்களை வித்தியாசமான வழிகளில் அணுக வழிவகுத்துள்ளது.
க்ளோகாட் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் குழுவானது வட மத்திய மாகாணத்தில் சிறிய பாடசாலையொன்றிற்கு விஜயம் செய்திருந்ததுடன் அசுத்தமான குடிநீரால் பற்களில் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தனர். இதற்கு மேலதிகமாகரூபவ் தண்ணீர் ஃபில்டரை நிருவுவதற்கு முன்னதாக இப்பிரதேச மக்கள் நீரினை காசு கொடுத்தே பெற்றுக்கொண்டிருந்ததுடன் இருப்பினும் சமைத்தல் மற்றும் தூய்மையாக்கல் நடவடிக்கைகளுக்கு சுகாதாரமற்ற நீரைப் பயன்படுத்தியமையால் சீர்படுத்த இயலாத வாய் சுகாதார பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தன.
“க்ளோகாட் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் உற்பத்திரூபவ் இச் சிறுவர்களை சென்றடைந்துள்ளதுடன், விசேடமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் ப்ளோரைட் அடங்கிய பற்பசையினால் பல்துலக்குவதை ஊக்குவித்தமை அவர்களின் பல் ரூடவ்றுகளை உறுதியாக்கி, பற்சொத்தையை தடுத்து வாய் சுகாதாரத்தை மேம்படுத்தியுள்ளது” என ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் வாய் பராமரிப்பு பிரிவின் உதவி வர்த்தக நாம முகாமையாளர் ஷனடி லியனகே தெரிவித்தார்.
க்ளோகாட்டின் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் பிரச்சாரம் மூலமாக மெஜஸ்டிக் சிட்டியில் நிறுவப்பட்டிருந்த சாவடியில் “புத்துணர்ச்சியுடன் தெரிவியுங்கள்” பெறுதியை வெளிப்படுத்தி சிறுவர்களை வாழ்த்துமாறு பொதுமக்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு வாழ்த்திற்கும், க்ளோகாட் மூலமாக தண்ணீர் ஃபில்டரை கொள்வனவு செய்வதற்காக ஒரு ரூபாய் வீதம் நன்கொடை வழங்கப்பட்டிருந்தது. இந்த பிரச்சார திட்டத்துடன் இளைஞர்களும் இணைந்து கொண்டு சிறுவர்களுக்கான தமது ஆதரவை வழங்கியிருந்ததுடன் பொதுமக்களும் பங்களிப்பு செலுத்தியிருந்தனர்.
க்ளோகாட்டின் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல்லின் பிரச்சாரம் மிகப் பெரியளவில் வெற்றியடைந்ததுடன், க்ளோகாட் பேஸ்புக் பக்கத்திலும் (www.facebook.com/clogard) காட்சிப்படுத்தப்பட்டது. TNL வானொலி மூலமாக பொதுமக்களிடமிருந்து 200,000 இற்கும் மேற்பட்ட வாழ்த்துக்கள் பெறப்பட்டிருந்தன.
“இதற்கு முன்னர் பாடசாலை கிணறு மற்றும் அப்பகுதி கிணறுகளிலிருந்தே சிறுவர்கள் நீரைப் பெற்றுக்கொண்டிருந்தனர். தூய்மையாக்கல் மற்றும் கை கழுவுவதற்கு நாம் பயன்படுத்திய நீர் தூய்மையானதா என்பதற்கான எந்த உத்தரவாதமும் இருந்ததில்லை. முதியோர் மற்றும் சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருப்பினும், தற்போது நாம் சுத்தமான குடிநீரை பெற்று வருகிறோம்” என ஆசிரியை யு.எஸ்.எ.எம்.நிலக்ஷி தெரிவித்தார்.
க்ளோகார்ட் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் பற்பசை மூன்று தெரிவுகளில் கிடைக்கின்றன. கராம்பு மற்றும் யூக்கலிப்ட்டஸ் தைலம் அடங்கிய உறுதியான சுவை கொண்ட ஸ்பைசி ரெட் ஜெல் பற்பசை பாவனையாளர்களுக்கு எழுச்சியூட்டும் சுவையை வழங்குகிறது. மின்ட் மற்றும் உப்பு சுவையுள்ள கூல் ப்ளு தெரிவுகள் புத்துணர்ச்சியூட்டக்கூடிய கூலான பல்துலக்கும் அனுபவத்தை வழங்குகிறது. மேலும் நெல்லி மற்றும் கற்றாளை அடங்கிய பச்சை பற்பசை நுகர்வோருக்கு இனிமையான ஹேர்பல் அனுபவத்தை பாவனையாளர்களுக்கு வழங்குகிறது. மூன்று க்ளோகார்ட் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் தெரிவுகளும் கிருமிகளுக்கு எதிராக பேராடி, நீடித்த புத்துணர்ச்சியூட்டும் சுவாசத்தையும் வழங்குகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM