அஹுங்கல்ல, பாணந்துறை மற்றும் ரம்புக்கனை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்களை கைப்பற்றுவதற்காக இலங்கை இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை (11) சோதனைகளை மேற்கொண்டனர்.
அந்த வகையில், அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 78 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 06 கிராம் ஹெரோயின், 525 கிராம் கஞ்சா மற்றும் 02 லீற்றர் சட்டவிரோத மதுபானம் ஆகியவற்றுடன் 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 05 கிராம் 510 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 09 கிராம் 950 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 08 லீற்றர் 250 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 11 சந்தேக நபர்கள் பிடியாணையுடன் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 26 லீற்றர் 250 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 04 சந்தேக நபர்களும், 1066.5 லீற்றர் (06 பீப்பாய்கள்) கோடாவுடன் ஒருவரும் பிடியாணையுடன் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி, இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 83 கிராம் 710 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 15 கிராம் 950 மில்லி கிராம் ஹெரோயின், 525 கிராம் கஞ்சா, 36 லீற்றர் 750 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 1066.5 லீற்றர் கோடா (06 பீப்பாய்கள்) என மொத்தம் 20 ஆண்களும் 02 பெண்களும் பிடியாணைகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM