ரஸ்யாவுடனான போர் முனையில் இரண்டு வடகொரிய படைவீரர்கள் உயிருடன் கைது - உக்ரைன்ஜனாதிபதி

Published By: Rajeeban

12 Jan, 2025 | 10:28 AM
image

ரஸ்யாவுடனான போர்முனையில் காயமடைந்த இரண்டு வடகொரிய இராணுவத்தினரை கைதுசெய்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கேர்ஸ்க்கின் ஒப்லாஸ்டில் இரண்டு வடகொரிய இராணுவத்தினரை கைதுசெய்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கிதெரிவித்துள்ளார்.

இருவருக்கும் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளோம்,அவர்களை உக்ரைன் பாதுகாப்பு சேவையை சேர்ந்தவர்கள் தடுத்துவைத்துள்ளனர் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

காயமடைந்த வடகொரிய இராணுவீரர்களை கைதுசெய்ய உதவியமைக்காக உக்ரைனின் பரசூட் படைப்பிரிவினருக்கும், விசேட படைப்பிரிவினருக்கும் அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.

உக்ரைனிற்கு எதிராக வடகொரிய படையினரை பயன்படுத்துவது குறித்த எந்த ஆதாரத்தையும் ரஸ்யா அழித்துவிடுவது வழமை என்பதால் வடகொரிய படையினரை கைதுசெய்துள்ளமை சாதாரணமான செயல் இல்லை என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவர்கள் 9 ம் திகதி கைப்பற்றப்பட்டனர் அவர்களிற்கு ஜெனீவாபிரகடனத்தின் அடிப்படையில் அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்கியதாக உக்ரைன் இராணுவத்தினர்  தெரிவித்துள்ளனர்.

சர்வதே சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய இடத்தில் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் ஆங்கிலத்திலோ உக்ரைன் மொழியிலோ ரஸ்ய மொழியிலோ உரையாடும் திறன் அற்றவர்களாக காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ள புலனாய்வு வட்டாரங்கள் தென்கொரியாவின் புலனாய்வு பிரிவின் உதவியுடன் அவர்களுடன் கொரிய மொழியில் உரையாடியதாக தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இரண்டு வடகொரிய போர்வீரர்களுடன்  எஸ்பியுவின் விசாரணையாளர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி அவர்களை பத்திரிகையாளர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

என்ன நடக்கின்றது என்ற உண்மையை உலகம் அறியவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு :...

2025-02-08 16:39:16
news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48