இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம், வாரத்திற்கு 54 விமான சேவைகளை இயக்குவதன் மூலம், இலங்கைக்கு வெளியே மிகப்பெரிய வெளிநாட்டு விமான நிறுவனமாக மாறியுள்ளது.
இந்த நிறுவனத்தின் விமானங்கள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் நகரங்களுடன் இந்தியாவின் பெங்களூர், சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நான்கு நகரங்கயை தினசரி சேவைகள் ஊடாக இணைக்கிறது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமானங்கள், இண்டிகோவின் நீண்டகால வளர்ச்சி திட்டத்தின் முக்கிய பகுதியாகும். இது, அதன் உலகளாவிய பங்கு மற்றும் பயணிகள் சந்தைகளை விரிவுபடுத்துவதற்கான உறுதிப்பாட்டினைக் காட்டியுள்ளது.
இது குறித்து இண்டிகோ நிறுவனத்தின் உலகளாவிய விற்பனைத் தலைவர் வினய் மல்ஹோத்ரா குறிப்பிடுகையில்,
இலங்கையிலிருந்து இயங்கும் முன்னணி சர்வதேச விமான நிறுவனமாக, நான்கு முக்கிய இந்திய நகரங்களுடன் இணைப்புகளைக் கொண்ட இவ்விதமான மைல்கல்லைக் கண்டமையானது எமக்கு பெருமைக் குறிய விடயமாகும்.
இது, இந்தியா-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டினை மீண்டும் அங்கீகாரம் பெறும் வகையில் உள்ளது.
விமான இணைப்புகளின் விரிவாக்கம், சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் நோக்காக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் புத்திக ஹேவாசம் கூறுகையில்,
யாழ்ப்பாணத்திற்கான இண்டிகோ விமான சேவைகள் நிறுவனத்தின் புதிய சேவைகள், வட மாகாணத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது.
இது பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்கமளிக்கும்.
இலங்கையில் இண்டிகோவின் பங்காளியான ஏகோர்ன் ஜி.எஸ்.ஏ ஏவியேஷன், 30 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்திற்கான பங்களிப்பை வழங்கி வருகிறது.
இந்தத் துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகித்துள்ளது. என்று அவர் கூறினார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இணைப்புகள், இரு நாடுகளுக்கும் பல்வேறு ரீதிகளில் நன்மைகள் தரும்.
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையை எளிதாக அணுகக்கூடியதாக இருக்கும். இந்த உயர்ந்த இணைப்புகள், சுற்றுலாவையும், கலாச்சார பரிமாற்றத்தையும் ஊக்குவிக்கவும் உதவும்.
இலங்கை பொருளாதார ரீதியாக அதிகமாக நன்மைகள் பெற்ற 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் 200,000 இந்திய சுற்றுலா பயணிகளின் பங்களிப்பில் இந்த விமான நிறுவனம் முக்கிய பங்கை பெற்றுள்ளது எனவும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM