களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்விலஹேனவத்த பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வலய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 28 வயதுடைய காலி பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
கைதான நபரிடமிருந்து 1,750 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
சந்கேத நபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையில், இவர் பல்வேறு மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
இவர் மோட்டார் சைக்கிள்களை திருடி, அவற்றை குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் வழங்கி வந்துள்ளார்.
அதன்படி காலி, பேருவளை மற்றும் பொத்தல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களில் திருடப்பட்ட 5 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM